பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழுதுபின் சென்று துதிபல பாடி வஞ்சக நெஞ்சினில் வாய்மை துறந்தும் அஞ்சுத லின்றி அரும்பழி இழைத்தும் செற் றமுங் கலாமுஞ் செய்தலே தொழிலாய் மற்றவர் பொருளை மறைவினிற் கவர்ந்தும் பகுத்தறி வின்றிப் பாழ்படும் பழைமையுள் நகத்தகும் மடமையுள் நாடொறும் மூழ்கி மதமுங் கடவுளும் வாயாற் கூறி அதனடை யாளச் சின்னம் அணிந்தும் எண்ணிய படியெலாம் இறைவன் பெயர் சொலிப் புண்ணியத் தலங்கள் பூசனை தீர்த்த்ம் என்றெலாம் கதைத்தும் எத்தித் திரியின் நன்றென் மக்கள் நயப்புடன் போற்றி ஆத்திகன் என்றே அழைத்திடல் கேட்டேன்; கூத்திது கண்டு குலுங்கச் சிரித்தேன்; (21–12–1978; 16 0 கெஞ்சிற் பூத்தவை