பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலை நண்பன் நிலைபெறும் நட்புடன் நிற்பைநீ எனவே தலையில் வைத்துனைத் தாங்கினேன் நண்பா! இலை நீ என்பால் இன்றெனைப் பிரிந்தனை நிலையில் இழிந்தாய் நினையா போற்றினேன்? மருத்துவர் தம்பால் மாதம் ஒருமுறை திருத்தி நின்னுடல் செழிப்புற வளர்த்தேன்; *ஆடிமுன் நின்றுனை அழகுறச் செய்திட நாடிய என்கை நலிந்து சோர்வுறத் தடவித் தடவித் தந்தநல் ஒப்பனை *மடவை நீயோ மறந்தனை பிரிந்தனை: ஒப்பனை செய்தபின் உன்றன் அழகை எப்படி எப்படி இருவிழி யாலும் பார்த்துப் பார்த்துக் களித்தேன்! அன்றைய நேர்த்திஎன் நெஞ்சில் நிலைத்து நின்றதே! குலையா தொழுங்குடன் கூடித் திகழ்ந்திடப் பலநாள் முயன்றேன் இலையே நன்றி! பணிந்தும் வளைந்தும் பழகினை அன்று Fo ஆடி - கண்ணாடி

  • மடவை - அறிவிலி

கவியரசர் முடியரசன் 0 21