பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*தணந்தாய் இன்று தளர்ந்ததென் மனனே, பகுத்தறி வில்லாய் படியா திருந்தனை வகுப்பில் வைத்துனை வளர்த்ததை மறந்தாய்! கருகரு வெனநீ கண்கவர் வனப்பொடு வளர்ந்து திகழ்ந்திட வாஞ்சையால் உன்னை நறுநெய் யூட்டி நாளும் வளர்த்தேன்; அன்று நான் தெம்பும் ஆற்றலும் உடைமையால் ஒன்றிய அன்புடன் ஒட்டி நின்றனை; இன்று நான் தளர்ந்தேன் இயல்புநீ மாறினை! வாழ்விலும் தாழ்விலும் மாறாக் குணத்தொடு சூழ்வதே நட்பெனச் சொற்றனர் முன்னோர்; வறுமையில் என்னுடன் வளர்ந்தனை இன்றோ பழமை மறந்தாய் பண்பினைத் துறந்தாய் என்முன் நில்லேல் இகழ்ந்துனை வெறுத்தேன்; மண்ணில் முடிநீ மாய்ந்து மடிநீ கண்முன் காணா தொழிகநீ கடிதே! --

  • தணர்ந்தாய் - பிரிந்தாய்

(தலையின் இழிந்த முடி பற்றிப் பாடியது.) (23–9–75) 22 0 கெஞ்சிற் பூத்தவை