பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ்ச்சியின் பயன் ஆர்வத் துடிப்பால் ஆசைப் பெருக்கால் பேர்பெற் றொளிரப் பெருகிய நினைப்பால் ஏதோ எழுதினன் என்பாற் கொணர்ந்தனன்; தீதோ நன்றோ திறந்துநான் படித்தேன்; செறிந்த கற்பனை சிற்சில அதனுட் சிறந்திடல் கண்டேன் சிந்தை மகிழ்ந்தேன் மகிழ்ந்துளம் நெகிழ்ந்திட வாழ்த்திப் புகழ்ந்தேன் புகழ்ந்துரை புகல்வது புரையன் றென்பதால்; பாவலன் நான்சொலும் பாராட் டுரையை ஆவலிற் பருகினன் அவனிரு செவியால்; நாவின் மழையில் நனைந்தனன் குளிர்ந்தனன் பாவின் திறமெலாம் பயின்றிடப் பலப்பல காவியம் படைத்தனன் கண்டு நான் வியந்தேன்; என்மொழி அவற்கோர் ஏணி யாயது; நன்மொழி நலந்தரும் என நான் உணர்ந்தேன்; மற்றொரு கவிஞன் வந்தனன் என்பால் பற்றுடன் அவன்தன் படைப்பினைத் தந்தனன்; புகழ்மொழி பொழிந்தேன் புதுப்புது நூல்பல புகலுவன் என்மனம் பூத்ததோர் நினைவால்; 24 0 கெஞ்சிற் பூத்தவை