பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருக்கிடும் புகழ்ச்சியை உளத்திடை நிறைத்தனன்; செருக்கினன்; மீசை முறுக்கினன். விரைத்தனன்; நிமிர்த்தினன் தலையை; நெருக்கினன் விழியை, உருத்து நோக்கினன் ஒப்பென என்முன் நிறுத்திட எவரே நிலத்தினில் உள்ளார்? யானே பெருங்கவி என்றவன் மனத்துள் தானே சொலிச்சொலித் தருக்கித் திரிந்தனன்; புதுவன படைக்கும் நினைவதை யிழந்தனன்; மதுமயக் குற்றென மதிமயக் குற்றனன்; இளங்கோ வள்ளுவர் எத்தனை யியற்றினர்? உளங்கொளும் ஒவ்வொரு நூலால் உயர்ந்தனர்' என்றவன் நினைந்தே இழிந்தனன் இழிந்தனன்; நன்றுரை புகன்றேன் நாவாற் புகழ்ந்தேன். என்மொழி அவற்கோர் இடுதடை யாயது: தவறுகள் உண்டாம் தகுவன ஆற்றினும் அவரவர் பண்பறிந் தாற்றா விடத்தென ஒதிய மொழிப்பொருள் உணர்ந்தேன் யானே. (23–12–1975) கவியரசர் முடியரசன் 0 25