பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல் சொன்ன கதை == ||. - தரையினில் மலையாய் நிற்பேன்

  • தளிதனில் சிலையாய் நிற்பேன் பொறைமிகு துணும் ஆவேன்

பொடிபடும் கல்லும் ஆவேன் அரைபடும் அம்மி யாவேன் ஆடிடுங் குளவி யாவேன் நெறியினை ஒழுங்கு செய்ய நிரப்பிடுஞ் சரளை ஆவேன்! விலையிலா மணிக ளாவேன் வெறும்பரற் கல்லும் ஆவேன் மலையெனப் பெரியோ னாவேன் மணலெனச் சிறுவ னாவேன் விலைமிகு மாளி கைக்குள் விந்தைசேர் வடிவில் நிற்பேன் குலைவுறுங் கூரை வேய்ந்த குடிலுக்குந் துணையாய் நிற்பேன்!

  • (தளி-கோவில்)

கவியரசர் முடியரசன் E 41