பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெற்றெடுத்த பிள்ளையினைத் தனது மார்பில் பேதையவள் தத்திவிளை யாட விட்டாள்; கற்றொடுத்த இடமெல்லாம் தவழ்ந்து தத்திக் கனிமரங்கள் இடைப்புகுந்து குதித்துத் தாவி மற்றடுத்த பள்ளமெலாம் விழுந்தெ ழுந்து மலர்க்கொடிகள் செடிகள் பல பறித்தெ றிந்து கற்றடுக்கச் சலசலக்கும் மழலை பேசிக் கண்குளிர ஆடிவந்த தந்தப் பிள்ளை! தன்னிடையில் வைத்திருந்த பிள்ளை தன்னைத் தரையின் மிசை இறக்கிவிட, அருவி என்ற முன்மருவும் பெயர் மாறி, உருவம் மாறி முழங்கிவரும் ஆறென்னும் பெயரைப் பெற்றாள்! பின்னரவள் முல்லை நிலக் காடு புக்குப் o பீடுபெற நடந்துவந்தாள், முல்லை என்ற கன்னியொடு தோழமைகொண் டுலவி வந்தாள்; காடெல்லாம் குழலோசை இனிக்கக் கேட்டாள்! மருதமெனும் நிலம்புகுந்து தங்கிக் தங்கி மனமகிழ்ந்து நடைபயின்றாள்; உழவ ரெல்லாம் வருகவென வரவுரைத்தார்; மகிழ்ந்து போற்றி வாழ்த்துரைத்தார்; கலைபலவும் விரித்து * வைத்தார்; கவியரசர் முடியரசன் 0 4.7 -