பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபுறமும் பசுஞ்சோலை செழித்து நிற்க இயற்கைஎழில் எவ்விடத்தும் குலுங்கி நிற்க மருவுகிற வயலெல்லாம் பசுமை யாக்கி மாந்தருளம் செம்மையுற நடந்து சென்றாள்! மலையகந்தான் ஆற்றுக்குப் பிறந்த வீடு: வளமலிந்த கடற்பரப்பே புகுந்த வீடு; தொலைவறியா வளமுடைய முல்லைக் காடு தூயவட்குச் சிற்றன்னை; அவட்க டுத்த கலைமலிந்த காமலிந்த மருதம் அந்தக் காரிகைக்குத் தாய்மாமன், மகிழ்ந்து பெற்ற தலைமகளைப் புக்ககத்துக் கனுப்பும் போது தாய்தந்த சீர்வரிசைக் களவே யில்லை! சந்தனங்கள் தொகுத்தளித்தாள், தினைய விரித்தாள், சாதிமரத் தேக்களித்தாள், மதங்கொள் யானைத் தந்தங்கள் பலவளித்தாள், மணியும் முத்தும் தங்குதடை யில்லாமல் வாரித் தந்தாள்; வந்தெங்கள் கலிதீர்த்த மகளே, வேண்டும் வளமெல்லாம் வாரிப்போ' என்று சொன்னாள்; சொந்தங்கள் குறைசொல்லக் கூடா தென்றே சொலற்கரிய சீர்வரிசை தந்தாள் அன்னை! முல்லை.எனும் சிற்றன்னை, தன் பால் வந்த முதல்மகளைத் தலைநீவி உச்சி மோந்து மல்லிகையால் தலைக்கோலம் செய்து விட்டு மான்கன்றும் விளையாடத் தந்தாள்; மேட்டுக் 48 - கெஞ்சிற் பூத்தவை