பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசையாத பொருளுக்கும் உலகில் உள்ள அசைகின்ற பொருளுக்கும் பசையாய் நிற்பாய்! இசையால்நின் சிர்முழுவதும் எடுத்துச் சொல்ல எழுத்தனைத்தும் சேர்த்தாலும் முடியா தம்மா! நசையால் நின் னடிதொட்டுத் தொடைகள் சூட்டி நாளெல்லாம் தொழுகின்றோம் அழுது நின்றோம் பசியாலே தளையுண்ட மக்க ளுக்குப் பாலமிழ்தம் பொழிவதுநின் கடமை யன்றோ? ஏருழவன் பாட்டுக்குப் பொழிப்பு மோனை இணைமோனை யாகி அணி கூட்டி நிற்பாய்! மாரியென நின்பெயரைச் சொல்ல லன்றி மாறியென ஒருநாளும் உரைத்த தில்லை; பாருழல முரண்டொடையாய் மாறி நின்றாய்! பயன்முழுதும் செங் தொடையாய் மாறிற் றம்மா! காருனது மனத்தியை புத் தொடைபொ. ருந்தக் கருணைமழை பொழிந்தருள்வாய் உலகம் உய்ய! மயங்கிசையும் தாழிசையும் கேளா வண்னம் மழையோசை கேட்கட்டும்; செய்யுள் எல்லாம் பயன்கெழுமி வளங்கொழிக்கத் துள்ளல் ஓசை பரவட்டும் வனப்புமிகும் இல்ல மெல்லாம் வயங்கிழையார் வளையோசை பொங்கப் பொங்கல் வழங்கட்டும்; புறநடையில் மாந்தர் செல்லா தியங்கட்டும்; ஒழுகிசைவான் வழங்க எங்கும் இன்பமெலாம் பொங்கட்டும், மழையே வாவா.


(வான்பொய்த்த போது வருந்திப் பாடிய பாடல்.) (பாடலில் யாப்பிலக்கணச் சொற்கள் பயின்று வந்துள்ளன. அவற்றின் பொருள் தயங்கண்டு மகிழ்க.) (9–12–74) கவியரசர் முடியரசன் - 51