பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈண்டவன் யாண்டுளன்? எனயான் வெகுண்டு கோடியன் அவனைக் கொல்லுவன் பாய்ந்தெனத் தொடுவேல் எடுத்துத் துணிந்து நடந்தேன்; எங்கோ மறைந்தனன்! எடுத்தஅவ் வேலைப் பொங்குமென் னெஞ்சிற் புகுத்திக் கொண்டேன்; நின்நா மொழிபுகல் நாள்வரின் நெஞ்சிற் பாய்வே லதனைப் பறித்தெறி வேனே! (புதுச்சேரி கவிதைச் செல்வர் கல்லாடன் மகள் திருக்குழலி பேசாமையறிந்து மனம் நொந்து பாடியது.) (4–5–1987) கவியரசர் முடியாசன் ロ 55