பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தும் வறுமையொடு கண்மூடிக் கொள்கைஎனச் சீறி வரும்பகையோ செப்பத் தொலையாது நூறு பகைவரினும் நூறித் தொலைப்பதற் கூக்கந், துணிவுடைமை, ஒர்ந்துணருங் கூரறிவு, காக்கும் படையாகக் கைக்கொண்டு போராடி வெற்றிக் களிப்போடு வீறு நடை போட்டுநலம் பெற்றுத் திளைப்பதுதான் பேருலக வாழ்க்கைநெறி; போராட்டங் கண்டஞ்சிப் போகாமல் --- வாழ்க்கைஎனும் தேரோட்டி இன்பந் திளைப்பவனே வீரன்; ஒருபகை கண்டஞ்சி ஒலமிட் டோடி மருள்பவன் நாளும் மடிகின்ற கோழை; நிலவுக்கும் வாழ்க்கை நிகராகும், ஒரும் புலனுக்கு நன்கு புலனாகும் இவ்வுண்மை: கூடிக் களிப்போர்க்குக் கோடி மகிழ்வுதரும், ஊடிப் பிரிந்தோர்க்கோ ஓயாக் கவலை தரும்; கூறுமிவை வானிலவின் கொள்கையல, சூழ்நிலைகள் சேரும் மனநிலையாற் செய்பயனும் வேறாகும்; சூழ்நிலைக் காளாகிச் சுற்றும் மனநிலையால் வாழ்வினையும் வெவ்வேறு வாட்டத்திற், - - காண்கின்றான்; _ - --- --- == (வம்புத்தேன் - புதிய தேன்) 60 0 நெஞ்சிற் பூத்தவை