பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மஞ்சின் கருமையெலாம் வார்கூந்தல் மேலேந்தி, நீண்ட கயல்விழியில் நெஞ்சக் குறிப்பேந்திப், பூண்ட சிலம்பொலியைப் பூவடியில் தானேந்தி, மாநிலத்துப் பூத்த மலரெல்லாந் தந்தஎழில் மேனியகத் தேந்தியவள் மெல்லிய நற் கைம்மலரில்; ஆவின்ப லேந்தி அழகுச் சிலைபோலப் பூவின் முகஞ்சுருங்கப் போந்தருகில் நின்றிருந்தாள்! தென்றலுக்குப் பின்வந்தாள் தெள்ளமிழ்தம் o கைக்கொடுத்து நின்றிருக்கக் கண்டு நிமிர்ந்து முகம்பார்த்தேன்; செந்தா மரைமுகத்தில் சேர்ந்த சிரிப்பெங்கே? தந்தா ஒளியெங்கே நன்மலர்ச்சி தானெங்கே? வந்த துயரத்தை மாற்றும் மருந்தாகும் இந்த எழில்முகத்தில் ஏக்கம் படருவதோ! என்று துடிதுடித்தேன் இன்ப நிலைமறந்தேன் ஒன்றும் புரியாமல் உள்ளம் பதைபதைத்தேன்; பால்தந்த பாவாய் பசுந்தமிழே என்னுயிரே சேல்தந்த நின் விழிகள் செக்கச் சிவந்தனவே நெஞ்சங் கடுக்க நிகழ்ந்த செயலென்ன? வஞ்சியுன் வாண்முகத்தில் வாட்டம் அரும்புவதேன்? செந்தமிழ்க்கும் உன்றனுக்குந் தீங்குவர நான் தரியேன் வந்ததுயர் யாதென்று வாய்விட்டுச் சொல்கண்ணே என்றுருகி நான்கேட்டேன்; என்றன் உயிரனையாள் நன்று நன்று நும் நடிப்பு நாடகமோ ஆடுகின்றீர்? கவியரசர் முடியரசன் D 63