பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல படமென்று நாளும் பலர்கூடிச் செல்லும் அதுகாணச் சேர்ந்து நாம் சென்றுவர நாலாறு நாளாக நான்கெஞ்சிக் கேட்கின்றேன் பாலாகத் தேனாகப் பேசிப் பகட்டுகின்றீர் இன்றென்றும் நாளையென்றும் ஏய்த்து வருகின்றீர்! ஒன்றென்ன நூறுண்டே உங்கள் விளையாடல் அஞ்சாறு திங்களா ஆரணிப் பட்டொன்று கெஞ்சாத நாளில்லை கேளாத நேரமில்லை காஞ்சிபுரப் பட்டா கனத்தவிலை என்பதற்கு? வாஞ்சை யிருக்குமெனில் வாங்கித் தருவீர்கள்: இன்னும் புகல்வதெனில் எவ்வளவோ ஈங்குளவே!" என்னும் மொழி கூறி ஏந்திழையாள் ஊடிநின்றாள்: ஆடல் மயிலணங்கே ஆருயிரே தேன்மொழியே! ஊடல் மிகுந்தமையால் உள்ளம் புலந்தனையோ? ஆரணி ஒன்றென்ன ஐம்பதுடன் காஞ்சிபுரம் நூறணியக் காலம்வரும் நேரம்வரும் நுண்ணிடையே ஊடல் தவிர்ந்தெழுக உன்மகிழ்வே என்மகிழ்வு பாடல் தருஞ்சுவையே பண்பின் உறைவிடமே இன்றே படங்கான ஏகுவோம் நீசென்று நன்றே உடைமாற்றி வாவென்று நானுரைத்தேன்: சொல்லி முடிக்குமுனம் துள்ளிக் குதித்தெழுந் தல்லிக் கொடிபோல் அசைந்தோடி உட்புகுந்து செப்புச் சிலைபோல ஒப்பனைகள் செய்துவந்தாள் அப்பப்பா என்னே அழகு! _ = - 64 0 கெஞ்சிற் பூத்தவை ai അു * o * * ாே