பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெருக்கடைசி வீட்டிலுந்தான் பிள்ளை யுண்டு, திரிந்தலையும் போக்கினைத்தான் பார்க்கின் றோம்நாம்; உருப்படுமா றொருசெயலுஞ் செய்வ துண்டா? ஒழுங்காகப் பள்ளிக்குச் செல்வ துண்டா? பொறுப்புடனே புத்தகத்தைத் தொடுவ துண்டா? புத்திமதி சொன்னாலுங் கேட்ப துண்டா? வெறுப்படைந்து பெற்றோரே நொந்த துண்டு வீணாகப் போவதற்கீ தறிவிப் பென்றேன். உலகியலின் பலகதைகள் பேசிப் பின்னர் உணவுண்ணச் சுவையமுது படைத்த ழைத்தாள்: சிலமொழிகள் உரையாடி உண்ணும் போது சிறுவிக்கல் ஒலிகேட்டு நீரைத் தந்தாள்: விலகியது வருவிக்கல், உண்ட பின்னர் வெளியிடத்தில் சாய்ந்திருந்தேன் அவளும் வந்தாள் சிலபொழுதில் பேரேப்பம் ஒன்று விட்டேன் "செரித்ததென அறிவிக்கும் அறிவிப் பென்றாள். கனிமொழியாள் கொட்டாவி விடுதல் கண்டேன், கண்ணிமைகள் இணைவதற்கோ அறிவிப் பென்றேன்; இனியவளும் அயர்விழியால் ஆமாம் என்றே எழுவதன்முன் இருதும்மல் தும்மி விட்டேன்; பனிபொழியும் நிலவொளியில் நீண்ட நேரம் படுத்திருந்தால் தும்மல்வரா தென்ன செய்யும்? இனியெழுக உள்வருக என்ற ழைத்தாள்: .என்மனையாள் குறிப்பறிந்தேன் எழுந்து --- . . சென்றேன். கவியரசர் முடியரசன் 0 69 r