பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதுவா இதுவா? தலைவி: உறவா. பகையா கேட்டு வருவாய் - வரும் உளமா இலையா பார்த்து வருவாய் இரவா பகலா இந்தப் பொழுதே இடரே மிகலால் கண்கள் அழுமே! தலைவன்: ஒளியா இருளா இந்த மனையில் உருவா நிழலா என்றன் விழியில் விழியா கணையா அந்த விழிகள் வெயிலா நிழலா சொன்ன மொழிகள்! தலைவி: கனவோ நனவோ வந்து மறையும் கணையோ மலரோ கட்டில் மருவும் கனலோ புனலோ கண்ணில் வழியும் கதிரோ மதியோ விண்ணில் தவழும்! கவியரசர் முடியரசன் D 79