பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

இவருக்கு வயது 60க்கு மேலான போதிலும் பாலியனைப் போல சுருசுருப்புடன் வேலை செய்வதன்றியில் நமது தேசத் தாரின் பேரில் அவருக்கிருக்கும் அன்பை அளவிடப்படாது. இந்த மஹாத்மாவுக்கு அனுகூலமாக ஐகோர்ட்டு ஜட்ஜி சர் வில்லியம் வெட்டர்பர்ன் துரையவர்களும். மகாவித்வ சிரோன்மணியும், எலி பின் ஸ்டோன் காலேஜ் பிரதம பண்டிதருமாகிய பிரபலர் வொர்ஸ் வர்த்து என்பவரும் முன் சொன்ன மகரிஷியைப் போலவே நமது தேசத்து ஜனங்களி டத்தில் அத்தியந்த கருணையுடையவராகி, நமக்காகப் பாடுபடும் பெருந்தன்மையை யென்னென்று சொல்லுவோம். சத்தியம், சாந்தம், தருமம், தயை முதலான குணங்களெல் லாம் திரண்டு உண்மையான உருவெடுத்த இந்தத் துரை மார்களுக்கு நிகரான வேறு துரைமார்களே எமது ஜன்மத் திற் கண்டதில்லை.

இப்படிப்பட்டவர்களுக்கு இடையில் பிரகாசிக்கும் கனம் பொருந்திய தாதாபாய் நவரோஜி யென்பவர் ஒரு மஹரிஷி யென்றே சொல்லலாம். இவருக்கும் வயது 60க்கு மேலுண்டு. இவர் இங்கிலீஷ் பாஷையைப் பேசும் சாமர்த்தி யத்தைச் சொல்லி முடியாது. இவர் இத்தேசத்து ஏழைக் குடிகளுடைய கஷ்டத்தை நீக்கவேண்டுமென்று கனவிலும் நனவிலும் கருத்தாகக் கொண்ட மஹாதாதா. இதற்கென்று ஆறு தடவை சீர்மைக்குப் போய் அவ்விடத்தில் துரைமார் களிடம் சண்டைப்போட்டும் அநேக திரவியத்தைச் செலவு செய்தும் வந்ததன்றியில், ஏழைக் குடிகளுக்காகக் கண்ணிர் விட்டழப்பட்ட பரம புருஷர். இவருக்குத் தாதாபாய் என்ற். பொருந்திய பெயர் இயற்கையாக யமைந்தது ஈசன் கருத்தாக விருக்கலாம்.

மேஸ்டர் பெரோஜஷா மெர்வாஞ்சி மீடா என்பவர், அதிக வருமானத்தையுடைய பாரிஸ்டராயிருப்பதன்றியில் அந்த பம்பாய் பட்டன. முனிசிபாலிட்டியின் சபாநாயகராக விருந்த போதிலும், டம்பம் பெருமையென்பது கொஞ்சமு மற்றவர். இவர் பேசுவதில் மகா சமர்த்தர். இவரது சப்தம்