பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|ஆறுமுக நாவலருக்குப் பிறகு சமயச் சொற். பொழிவாற்றுவதில் மிகச் சிறந்து விளங்கிய மூவ ருள், சூளை சோமசுந்தர நாயகரும் ஒருவர். அவர், வைணவ மதத்தையும், வைணவப் பெரியார்களே யும் கடுமையாகக் கண்டித்தெழுதியும் பேசியும் வந்தவர்.

அவர், தாம் எழுதிய பாஞ்சராத்திர மத. சபேடிகை அல்லது சைவ சூளாமணி எனும் நூலில், புதுவை இராமாநுச நாவலரவர்களை அவுசாரி மகன்’ என்று இழிவாகக் குறிப்பிட்டு எழுதியதால், நாவலர் அவர்மீது சென்னைப் பட்டணம் பிரசி டென்சி மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் வழக்குத் தொடுத்தார்.

புதுவை இராமாநுச நாவலவர்கள் சூளை சோம. சுந்தர நாயகரவர்கள் மீது கொண்டுவந்த அவதுாறு: வழக்கானது, 1891-ம் ஆண்டு ஜனவரித் திங்கள் 8-ஆம் நாள் சென்னை மாஜிஸ்ட்ரேட் மிஸ்டர்.மாஸ் கல்துரை அவர்கள் முன் விசாரணைக்கு வந்தபோது, நாவலவர்களுக்காக மிஸ்டர்-அட்டர்னி பி. திரு வேங்கடசாமி பிள்ளையவர்களும், பாரிஸ்டர்-மிஸ் டர் ராபர்ட் கிராண்ட் துரையவர்களும்; நாயகர வர்களுக்காக மிஸ்டர்-அட்டர்ணி எம். இ. அப்பா துரை முதலியாரவர்களும், பாரிஸ்டர்-மிஸ்டர் ராமசாமி ராஜூ அவர்களும் ஆஜரானதோடு, நாவலவர்களைத் துவதித்த அவுசாரி மகன்' என்னும் பதத்திற்கு, நாவலரவர்கள் கொண்ட அர்த்தமே சரியெனக் கூற ராமாயணப் பிரசங்கி பிரம்மபூரீ. ப. கிருஷ்ண சாஸ்திரியார் அவர்களும், இன்னும் சில வித்துவான்களும்; நாயகரவர்கள் எழுதிய பதத் திற்கு நாவலர் கொண்ட அர்த்தம் அதுவல்ல என் பதற்கு தாமோதரம் பிள்ளை அவர்களும், நார்மல் ஸ்கூல்.வேலுப் பிள்ளை அவர்கள் முதலிய வித்து வான்களும், சகாயமாக வந்திருந்தார்கள்.