உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாக்குக் கடையில் வெற்றிலை வாங்கிப் போட்டுக்கொண்டு, வாய் சிவக்கச் சிவக்க, உறவினர் வீட்டுக்கு வந்தேன். அவர் எனக்காகத் திண்ணையில் காத்துக் கொண்டிருந்தார். நான் சென்றதும் சிறிது நேரம் ஊர்க் கதைகளைப் பேசிக் கொண்டிருந்து விட்டு அவர் படுக்கச் சென்றுவிட்டார். நான் திண்ணையில் உடலைச் சுருட்டிக்கொண்டு படுத்திருந் தேன். விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து முதல் பஸ் ஸைப் பிடித்துத் திருவாரூருக்குச் செல்லக் செல்லக் கிளம்பினேன். பஸ் ஸில் உட்கார்ந்த பிறகு திருவாரூருக்கு நான் தர வேண்டிய பஸ் கட்டணம் குறைவாக இருக்குமோ என்று ஒரு சந்தேகம் எழுந் தது. அப்போது எனக்குத் தெரிந்த ஒருவர் திருவாரூர் செல்ல பஸ் ஏறினார். அவர் டிக்கெட்டுக்கான பணத்தைச் சில்லறை யாக எடுத்தார். நான் என் கையில் இருந்த சில்லறைக் காசுகளை அவருடைய கையிலே போட்டு, "எனக்கும் ஒரு டிக்கெட் எடுங்கள்" என்று சொன்னேன். நல்ல வேளையாக அவர் எண்ணிப் பார்க்காமல் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்துக் கண்டக்டரிடம் கொடுத்து எனக்கும் சேர்த்து ஒரு டிக்கெட் வாங்கிவிட்டார். இந்த நிகழ்ச்சிதான் எனக்கு ஜோலார்பேட்டை சந்திப்பில் ஞாபகத்திற்கு வந்தது. நான் உடனே கண்ணதாசனிடம் சொன்னேன்: "இருவரும் ஆளுக்கொரு வெற்றிலை பீடா வாங்கிப் போட்டுக்கொண்டு சாப்பிட்டவர்கள் போல, வாய் சிவக்க ஜமீன்தார் எதிரிலே செல்லலாம்" என்று. எங்களிடம் அதற்குக் காசு இருந்தது. இருவரும் வெற்றிலைப் பாக்குக் குழையக் குழைய இரண்டாம் வகுப்புப் வகுப்புப் பெட்டிக்குள் சென்றோம். ஜமீன்தார் ஏப்பம் விட்டவாறு, "என்ன சாப்பிட்டாயிற்றா?" என்று கேட்டார் ', பிரமாதமான சாப்பாடு!" என்றவாறு நாங்கள் எங்கள் இருக்கையில் அமர்ந்து கொண்டோம். ஜமீன்தார், கொஞ்சம் பெட்டியைப் பார்த்துக் கொள்ளுங்கள். சற்று வெளியில் போய் வருகிறேன்" என்று கூறி விட்டுக் கீழே இறங்கிச் சென்றார். நொடித்துப் போன ஜமீன்தார் என்ற காரணத்தினால் அவரைச் சுற்றி யாரும் ஆள் அம்புகள் இல்லை. அவர் கீழே இறங்கிச் சென்ற பிறகு நானும் கண்ணதாசனும் அவர் கூடையில் வைத்துப் போன பழங்களையே பார்த்துக் கொண்டிருந்தோம். கண்ணதாசன் என்னிடம் மெதுவாக, ஏனையா, ஜமீன்தாரிடம் ஓர் ஐந்து ரூபாய் பணம் கேட்டால் என்ன?” என்று ஆரம்பித்தார். நான் உடனே சொன்னேன் "பேசாமல் இரும்; பணம் கேட்டு அவமானப்படவேண்டாம்" என்று. சிறிது நேரத்திற்கெல்லாம் ஜமீன்தார் வந்துவிட்டார். வண்டியும் புறப்பட்டது. கண்ணதாசன் உதடுகள் ஏதோ ஒரு பாட்டை முணு 139