உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முணுத்துக் கொண்டிருந்தன. நான கூர்ந்து கவனித்தேன். "ஐயா, சிறுவன்; ஏழை என்மேல் மனம் இரங்காதா?" என்ற பாடலைத் திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டிருந்தார். எனக்கு எப்பொழுதுமே பசி ஒரு பிரச்னையல்ல: அதற்குத் தன்னைப் பழக்கிக் கொள்ளாத என் நண்பர்தான் மிகவும் வாடிவிட்டார். மாலையில் ஜமீன்தாருக்குக் காப்பி வருகிறது. சுவைத்து அருந்துகிறார், "நீங்கள் காப்பி சாப்பிடவில்லை?” என்று எங்களை வேறு கேட்கிறார். "எங்களுக்குக் காப்பியே பிடிக்காது” என்று பதில் சொல்கிறோம். பச்சைப் பொய்தான், என்ன செய்வது? "ஆகா, இந்தக் காலத்து இளைஞர்கள் காப்பி கூடச் சாப்பிடுவது இல்லையா?" என்று வியப்போடு எங்களைப் பாராட்டுகிறார். எங்கள் உள்ளத்தின் அடிப்பு அவருக்கு எப்படித் தெரியும்? இரவு எட்டு மணிக்கு மேல் எங்களைச் சுமந்து வந்த வண்டி சேலத்தை அடைந்தது. இரயிலடியில் அப்போதுதான் திருவா ரூரிலிருந்து வந்திறங்கிய என் அன்னையும், மனைவியும், மாறனும், எனக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்த தும் எங்களுடைய முதல் கேள்வி, "சாப்பிட என்ன வைத்திருக் கிறீர்கள்? என்பதுதான். அவர்கள் கொண்டு வந்த கட்டுச் சோற்று மூட்டையை இரயிலடியிலேயே அவிழ்த்து அங்கே உட்கார்ந்தவாறே நாங்கள் இருவரும் சாப்பிட ஆரம்பித்தோம். கண்ணதாசன் இரண்டாம் வகுப்பு டிக்கெட் வாங்கிய கதையை அம்மாவிடம் சொல்லி, எல்லாருமாகச் சேர்ந்து சிரித்தோம். உங்கள்