உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொட்டை கட்டிக்கொண்ட பண்டாரங்கள் ஏது?' என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். கலைவாணர் பண்டாரத்தைப் பார்த்து, உண்மையைச் சொல்லட்டுமா?" என்று சற்று உரத்த குரலில் கேட்டார். பண்டாரம் தலையாட்டினார். "அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சிகளில் ஈடுபட்டு அரசாங்கத் தால் தேடப்பட்டு வருகிற கம்யூனிஸ்ட்டுகள் 'அண்டர் கிரவுண்ட்' வாழ்க்கை நடத்துகிறார்கள். அப்படிப்பட்ட ‘கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவர்தான் இங்கே அடைக்கலம் புகுந்திருக்கிறார். அவர்தான் இவர் என்று கண்டுபிடியுங்கள். இவரை யார் பார்க்கலாம்" என்று கலைவாணர் எனக்கு அறைகூவல் விட்டார். என்னால் உடனே கண்டு பிடிக்க முடியவில்லை. பண்டாரத்தை உற்றுப் பார்த்தேன். பிறகு புரிந்து கொண்டேன். அடர்த்தியான மீசையுடன் அடலேறு (பால் முழங்கிடும் ஜீவானந்தம்தான் அந்தக் கோலத்தில் இங்கேயிருக்கிறார் என்பதை! சுமார் மூன்று மாதங்களுக்கு ஜீவானந்தம் கலைவாணர் வீட்டு மாடியிலேயே காவியுடைப் பண்டாரமாக வாழ்ந்து வந்தார். ஜீவானந்தத்தின் மீது கலைவாணர் வைத்திருந்த பற்றைக் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது வைத்திருந்தார் என்று சொல்ல முடியாது.. 6