உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 வானத்து மத்தாப்பு 1957. io தி.மு.கழகம் ஈடுபட்டபோது கழகத்தின் வெற்றிக்காகக் கலைவாணர் பல்வேறு தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். ம் ஆண்டு முதன் முதலில் பொதுத் தேர்தலில் நான் அப்போது குளித்தலைத் தொகுதியில் போட்டியிட்டேன். என்னுடைய தேர்தல் பிரசாரத்திற்குக் கலைவாணரை ஒரு முறைதான் அழைத்தேன். அவரே தானாக மூன்று முறை வந்தார். தேர்தல் பிரச்சாரத்தை நடத்திக் கொடுத்தார். வாரி வாரி வழங்கிய அந்தக் கலையுலக வள்ளல் தன்னுடைய கடைசிக் காலத்தில் வறுமையால் கொட்டப்பட்டாரெனினும் வரட்டம் அடைந்தாரில்லை. அந்த நிலைமையையும் சிரித்தே சமாளித்தார். அந்த நெருக்கடியிலும் அவரது வள்ளல் தன்மை குறையவில்லை. சேலம் உணவு விடுதி ஒன்றில் அவர் தங்கியிருந்தபோது ஓர் ஏழை நடிகன் தன்னுடைய திருமணச் செலவிற்குப் பணம் கேட்கக் கலைவாணரிடம் வந்தான். அவனைத் தான் தங்கியிருந்த அறைக்கு வெளியே நிற்கச் சொல்லி விட்டுக் கை கழுவுவதற்குத் தண்ணீர் எடுத்துச் செல்வதுபோல் அங்குள்ள வெள்ளிக் கூஜாவை அறைக்கு வெளியே எடுத்து வந்து, அதனை அந்த நடிகனிடம் கொடுத்து இதை வைத்துக் கொள்" இப்போது என்னால் கொடுக்க முடிந்தது இவ்வளவுதான்" என்று கண் கலங்கக் கூறி அந்த நடிகனை அனுப்பி வைத்தாராம். மதுரம் மதுரம் அம்மையாருக்குத் தெரியாமல் கூஜாவைக் கொண்டு போய் அவனிடம் கொடுக்க வேண்டுமென்பதற் காக அவர் அப்படிச் செய்தாரென்றாலும், அதனைத் தெரிந்து கொண்ட அம்மையார், புரிந்தும் புரியாதது போல் நடந்து கொண்டார்களாம். . அப்போது சேலத்தில் தங்கியிருந்த சமயத்தில்தான் ஓர் ஊராட்சி மன்றத்தில் அண்ணாவின் திருவுருவப் படத்தைக் கலைவாணர் திறந்து வைத்துச் சொற்பொழிவாற்றினார். அதுதான் அவர் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி. அங்கிருந்து சென்னை திரும்பியதும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அவரது உயிரற்ற உடலைத்தான் நான் திரும்பப் பெற முடிந்தது அண்ணாவினுடைய கடைசிப் பொது நிகழ்ச்சி கலைவாணர் சிலையைச் சென்னையில் திறந்து வைத்ததுதான். அரசியல் 150