உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறையின் வாசலில் உட்கார்ந்திருந்த என்னுடைய காரோட்டி ரெங்கன், உள்ளே ஓடிவந்து என்னைப் பிடித்துக் கொண்டு, உடனடி யாகக் காரிலேற்றி, என்னை வீட்டிற்கு அழைத்து வந்தபோது, நடு வழியில் பெட்ரோல் இல்லாமல் அந்தக் காரும் நின்றுவிட்டது! நல்லவேளை, ஒரு சந்து முனை திரும்பினால் என் வீட்டிற்குப் போய் விடலாம். அப்போது நான் குடியிருந்த வீடு ராயப்பேட்டை பாலாஜி நகர் பகுதியில் இருந்தது. கண் வலி தாங்க முடியாமல் அலறிக் கொண்டிருந்த என்னைத் தன் முதுகிலே தூக்கிக் கொண்டு, ரெங்கன் வீடு நோக்கி நடந்தான். என் நிலையைக் கண்டு என் வீட்டார், 'ஓ' என்று கதறினார்கள். உடனடியாகக் கண் மருத்துவர் அழைக்கப்பட்டார். வீட்டிலேயே பத்து நாட்கள் வரையில் படுக்கையில் இருந்து கண் சிகிச்சை செய்து கொண்டேன். எந்தப் பயனும் தெரியவில்லை. இடது கண் பெரிதாக வீங்கிவிட்டன. குத்தல் வலி உயிரைப் பிளந்தது. 'தற்கொலை செய்து கொள்ளலாமா?' என்று எண்ணுகிற அளவிற்குத் தாங்க முடியாத வேதனை. அதற்குப் பிறகு சென்னையில் மிகத் திறமையான கண் வைத்தியர் என்று பெயர் பெற்ற டாக்டர் முத்தையா அவர்களை அழைத்து வந்தார்கள். அவர் என் கண்ணைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு உடனடியாகக் கண் மருத்துவ மனையில் என்னைச் சேர்த்து சிசிச்சைகளைத் தொடங்கா விட்டால் நன்றாக இருக்கிற வலது கண்ணும் பாதிக்கப்பட்டு விடும் என்று எச்சரித்தார். அதுவரையில் பழைய முறையில் என் கண்ணுக்கு வைத்தியம் செய்து மேலும் கொஞ்சம் கெடுத்துவிட்டதாக, முதலில் வைத்தியம் பார்த்த டாக்டரைக் கண் மருத்துவர்கள் அனைவருமே குற்றம் சாட்டினார்கள். மறு நாள் காலையில் கண் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டேன். உடனடியாக அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. ஒன்றல்ல, இரண்டல்ல; பன்னிரண்டு முறை என்னுடைய கண்ணில் டாக்டர் முத்தையா அறுவைச் சிகிச்சை நடத்தினார். அதில் நான்கு அறுவைச் சிகிச்சைகள் பெரிய அளவில் நடைபெற்றன. 265