உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் முத்தையாவினுடைய திறமையினால் என் கண் பிழைத்தது தாங்க முடியாத வேதனையில் இருந்து தப்பித்துக் கொண்டேன். கொஞ்சம விஷம் கிடைக்காதா? நண்பர்களும், வீட்டாரும் என் பக்கத் திலே இல்லாத ஒரு நேரம் கிடைக்காதா? இந்த வலியிலிருந்து நாமே விடுபட்டுக்கொள்ளலாமே என்று நான் பல தடவை நினைத்தது உண்டு. எனக்கு ஆறுதல் கூறி, ஒரு சகோதர உணர்வோடு என் பிணி போக்கிய அந்த நல்லவர் முத்தையாவை என் குடும்பத்தார் வாழ்த்தாத நாளே. இல்லை. என் அருகே இருந்து, வீட்டார் என்னைக் கவனித்துக் கொண்டதற்கு மேலாக, தோழர் கருணானந்தம் என்னை விட்டு ஒரு வினாடியும் பிரியாமல் அந்த ஆறு மாத காலமும் தன் விழிகளுக்குத் தூக்கம் என்கிற ஒன்றையே மறந்துவிடுகிற பயிற்சியை அளித்து, அல்லும் பகலும் பாடுபட்டார். அந்த ஆறு மாதமும் அவர் எனக்காகக் கண விழித்ததையெல்லாம் சரிக்கட்டுவதற கீடாக இப்போது தூங்கிக் கொண்டிருக்கிறார் என்றால் இது கற்பனை அல்ல. நெருங்கியவர்களுக்குத் தெரிந்த முழு உண்மை. தென்னன், மூர்த்தி ஆகியோரும் அவருடன் இருந்தனா. ஆறு மாத காலம் எத்தனையோ வேலைகள் கெட்டன. எவ்வளவோ பணம் செலவாயிற்று. கடமை தவறாமல் உழைக்க வேண்டிய மருத்துவத் துறையினரில் ஒரு சிலர் எவ்வளவு கடமை உணர்ச்சி அற்றவர்களாகவும், கடிய மனம படைத்தவர்களாகவும் இருக்கிறீர்கள் என்பதை நான் அநதச் சகிக்க முடியாத சங்கடத்திலும் உணர்ந்து கொள்ள முடிந்தது. டாக்டா முத்தையா எனக்கு அறுவைச் சிகிச்சை முடித்துவிட்டு, கண்ணில கட்டுப் போடுமாறு உதவி டாகடரிடத்திலே சொல்லிவிட்டுப் போய்விடுவார். அந்த உதவி டாக்டா என் கண்ணில் பஞ்சும், துணியும் வைத்துக் கட்டுமபோது வேண்டுமென்றே கண்ணில் ஓர் அழுதது அழுத்துவார். இப்படி இரண்டு தடவைகள் நடைபெற்றன. 'இப்படிக் கொஞ்சம் வசதி உள்ளவர்களுக்கே இந்தக் கஷ்டம் என்றால், ஏழை, எளிய நோயாளிகள், இந்த இரக்கமற்ற சிலரிடம் அகப்பட்டுக்கொண்டு என்ன பாடு படுவார்களோ?' என்றுதான் நான் கவலைப்பட்டேன். அந்த மருத்துவ மனையின் ஆர். எம். ஒ.வாக இருந்த ஆப்ரகாம் பிறகு அதே அதே மருத்துவமனையில் சூப்பரின்டெண்டாக இருந்தார். அவர் அன்றைக்கே என்னிடத்தில் மிகுந்த அன்பு கொண்டு அடிக்கடி அக்கறையோடு கவனித்து வந்தார். முத்தை யாவைப் போன்ற, ஆப்ரகாமைப் போன்ற நல்ல உள்ளங்கள் மருத்துவத் துறைக்குத் தேவை என்பதை நான் அன்றைக்கே உணர்ந்தேன். கழக ஆட்சியில் கண் சிகிச்சை முகாம்களில் டாக்டர் வெங்கடசாமியும், டாக்டர் ஆப்ரகாமும் ஆறறிய அரும்பணி அளவிடக்கூடியதா?