உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1967-ல் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று கழகம் உறுதியான நம்பிக்கையை அவ்வப்போது தெரிவித்து வந்ததற்கும் முன் மாதிரியாக இந்தக் கடற்கரைக் கூட்ட நிகழ்ச்சிதான் அமைந்தது என்று சொன்னால் அது மிகையல்ல. அந்தக் கூட்டத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் என்னைப் பற்றித் தனியாகவே பல முறை குறிப்பிட்டார்கள். ‘“3-ஆம் தேதியன்று என்னைப் பின் தொடர்ந்து வந்த காரிலிருந்த கருணா நிதியைக் கைது செய்தார்கள். அந்தக் காரை ஓட்டி வந்த ரங்கன் என்ற டிரைவரையும் கைது செய்தார்கள். இந்த சர்க்கார் எவ்வளவு கேலிக்குரியதாக நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள். 'கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்' என்பார்களே அதைப் போல கருணாநிதி வீட்டுக் கார் டிரைவரும் சர்க்காருக்கு எதிரி யாக அச்சமூட்டக் கூடியவராகக் காணப்படுகிறார்! இவ்வளவு அச்சம் எதற்காக? இப்படி அஞ்சி அஞ்சிச் சாவதைவிட ஒரு முழுக் கயிறு கிடை க்க வில்லையா?" இவ்வளவு கோபக் குரலோடு எப்போதாவது அபூர்வமாகத் தான் பேசுவார். அந்தக் கோப உணர்விலும் என்னைப்பற்றி நெக்குருகக் கூறியதைக் கேட்ட எனக்கு மகிழ்ச்சி கரைபுரண்டது. “ஒரு முழக் கயிறு கிடைக்கவில்லையா?” என்று அண்ணா கேட்ட தற்காக நாடு முழுவதும் காங்கிரஸ் வீழ்ச்சிக்கு வலைபின்னிக் காட்டி அண்ணனை மகிழ்விக்க வேண்டும்; மேலும் கடுமையாகப் பணியாற்ற வேண்டும் என்று அப்போது நான் பெரும் உறுதி எடுத்துக் கொண்டேன். அதிலிருந்து காங்கிரஸ் ஆட்சியை ஒழித்துக் கட்டுவதற்கான முயற்சியில் தான் கழகத் தோழர்களின் பணிகள் கலையுலகத்தில் எனக்கிருந்த தொடர்புகளையும் அதிலிருந்து கொஞ்சம் அமைந்தன. குறைத்துக் கொண்டு, முழுக்க முழுக்க அரசியலில்-அது என் சொந்த வாழ்க்கையை, குடும்பத்தின் தேவைகளைப் பெருமளவு பாதித்தாலும் -ஈடுபடத் துவங்கி விட்டேன். கழகத்தின் பணிகளில் அப்போது நான் முன்னணியில் இருந் தாலும் எனக்கிருந்த வேறு பல பொறுப்புகளும் கடமைகளும் சில நேரங்களில் குறுக்கிடுவதாக இருந்தன. இந்தக் 'குறுக்கீடு'களைக் குறைத்துக் கொண்டதும் முழு நேரக் கழகத் தொண்டனாக, அறிஞர் அண்ணா அவர்களின் அருகிலிருந்தே அவர் ஆணையை நிறைவேற்றும் முன்னணித் தொண்டனாக, தொண்டனாக, அதிலிருந்து பணியாற்றத் தொடங்கினேன். நான் 348