உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 நாமும் அமெரிக்காவும் அன்று நான் என்னுடைய முதன் முதலான அமெரிக்கச் சுற்றுப் பயணத்தை முடித்து நாடு திரும்பும் வழியில் இருந்தேன். நான் சென்னைக்கு வரும் அன்றே டிசம்பர் 5-இல் எனக்கு வரவேற்பு அளிப் பதற்காக நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியைப் பாகிஸ்தான் கூட்டமாக மாற்றுமாறு வெளிநாட்டி ஆக்கிரமிப்புக் கண்டனக் லிருந்தே கேட்டுக் கொண்டேன். பாகிஸ்தான் இந்தியா மீது நேரடிப் போரைத் துவக்கியதும் இந்தியாவிலேயே முக்கிய அரசியல் கட்சிச் சார்பாக முதன் முதலில் நடை பெற்ற கண்டனக் கூட்டம் அதுதான் என்பது என் கருத்து கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் நான் பேசுகையில் என்னுடைய சுற்றுப் பயண அனுபவத்தைச் சுருக்கமாக விளக்கிவிட்டு, அமெரிக்காவில், நிக்சன் நிர்வாகம் நிக்சன் நிர்வாகம் மட்டுந்தான் இந்தியாவுக்கு எதிர்ப்பாகச் செயல்படுவதாகவும், அமெரிக்க மக்களும் அதன் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும் இந்தியாவின் சார்பாகவே ஆதரவும் அனுதாபமும் காட்டி நிற்பதாகவும், நான் அங்கு சந்தித்த அரசியல் கட்சித்தலைவர்கள், செனட்டர்கள் ஆகியோரின் பெயரைச் சொல்லி, இந்தியா-பாகிஸ்தான் போர் பற்றி அவரவர் தெரிவித்த கருத்துக்களையும் விளக்கினேன். அது மட்டுமல்ல; “சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் தூங்கு கின்ற புலியை இடறியிருக்கிறார் பாகிஸ்தான் சர்வாதிகாரி. இதற் குள்ளாகவே அவர் இழந்து விட்டவை அநேகம். இந்த இழப்புக்கள் ஆரம்ப இழப்புக்கள்தாம். இழப்பின் முடிவு எதுவாக இருக்கும்? ஒரு வேளை பாகிஸ்தான் நாடு முழுவதுமாகவே இருந்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை" என்று குறிப்பிட்டு என் பேச்சை முடித்தேன். கலைவரணர் அரங்கில் நான் பேசிய கருத்துக்களைத்தான் தொடர்ந்து சட்ட மன்றத்திலும் வானொலியிலும் வலியுறுத்தினேன். ஆனால், என் கருத்துக்களைத் திரித்துக் காங்கிரஸ் கட்சியினரும், கம்யூனிஸ்டுகளும், தி.மு.கழகத்திற்கு எதிர்ப்பான ஏடுகளும் செய்த பிரச்சாரம் என்ன? 393