உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவருடைய அறிக்கையினை மறுத்துச் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தேன். ஒரு அந்த விளக்கத்திற்குப் பிறகும் கூட, மதுரை நிகழ்ச்சிக்கு நான் பார்வையாளனே அன்றித் தலைவன் அல்ல என்கிற உண்மையை உணர்ந்திட மனம் வந்திடவில்லை பெரியவர் பக்தவத்சலனாருக்கு. அவர் ஏன் அப்படி நடவாத ஒன்றினை நடந்ததாக இட்டுக் கட்டினார் என்பது பின்னர்தான் எனக்கு விளங்கிற்று. ஆம்; 1963 டிசம்பர், பத்தொன்பதாம் நாள் சிறைச்சாலையின் கதவுகள் எனக்காகத் திறந்திருப்பதாக எனக்கு அறிவிக்கப்பட்டது. அன்று சென்னை கோபாலபுரத்திலுள்ள என் இல்லத்தில் நாவலர், ப.உ.ச., நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி முதலான நண்பர் களுடன் நான் உரையாடிக் கொண்டிருந்தேன். பகல் 12-30 மணி இருக்கும். மதுரையிலிருந்து வந்த காவல் துறை அதிகாரி ஒருவர் என்னிடம் வந்து, "உங்களைக் கைது செய்திருக்கிறேன்” என்று அறிவித்தார். அவரை நோக்கி "எதற்காகக் கைது செய்கிறீர்கள்?” என்று கேட்டார் நாவலர். "எங்களுக்கு ஒன்றும் தெரியாது. மேலதிகாரிகள் உத்தரவு" என்று விடையளித்தார் அவர். அங்கே குழுமியிருந்த நண்பர்கள் வாழ்த்துக் கூறி வழியனுப்பிட, நான் காவல் துறை வண்டியிலே ஏறிக்கொண்டேன். திருவனந்தபுரம் விரைவு இரயில் வண்டி அரசாங்க விருந்தினராகி விட்ட என்னையும் அமைப்புச் செயலாளர் என்.வி. என்னையும் சுமந்து கொண்டு வெகு வேகமாகப் பறந்து சென்றது மதுரை நோக்கி. இடை மறித்தது திண்டுக்கல். இறக்கப்பட்டோம் இருவரும். தொடர்ந்து புகை வண்டியிலேயே பயணம் புரிந்திட்டால் எங்கள் கண்களில் கரித்தூள் படிந்திடுமே என்கிற கரிசனமோ; இல்லை, மதுரைச் சந்திப்பிலே கைதி நிலையிலே எங்களைக் கண்டுவிடும் மக்களிடமிருந்து மீட்டு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்குக் கொண்டு போக நேரமாகிவிடுமே என்று எங்களுக்குத் என்கிற மனக் கலக்கமோ; என்ன காரணம் தெரிந்திடவில்லை. கார் மூலமே திண்டுக்கல்லிலிருந்து மதுரைக்கு நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டோம். பதினைந்து நாட்கள் காவலில் வைக்கப்பட்டோம், நீதி மன்ற ஆணைப்படி. 496