உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தச் சிறிய சிறைவாசத்தின் போது ஒரு பெரிய மனிதரைச் சந்தித்திடும் வாய்ப்பினையும் நான் பெற்றேன். 1 அன்று எ மனைவி டாக்டர் சி.டி. தேஷ்முக் அவர்கள் தம்முடைய துர்க்காபாய் தேஷ்முக்குடன் 23-12-63 அன்று என்னைச் சிறையிலே வந்து பார்த்தார். ரிசர்வ் பாங்கின் ஆளுநராக இருந்திட்ட அவரின் மதி நுட்பத்தினைக் கண்டு வியந்திட்ட நேரு தம்முடைய மத்திய அமைச்சரவையில் நிதியமைச்சராகவே அவரைச் சேர்த்துக் கொண் டார்.ஆனால் என்னை வந்து சந்தித்தபோது அவர், 'முன்னாள் அமைச்சர்' ஆக மாறிவிட்டிருந்தார். அந்தப் பொருளாதாரப் புலி, கழகத்தின் பொருளாளனாகச்சாதாரண நிலையில் இருந்த என்னை வந்து, அதுவும் சிறையிலேயே வந்து, சந்திப்பார் என்று நான் எதிர் பார்த்திடவேயில்லை. அந்த மதுரைச் சிறைவாசம் நெடு நாட்கள் நீடித்திடவில்லை 25-12-63-இல் சில நிபந்தனைகளுடன் என்னைப் பொறுப்பில் விடுதலை செய்தது சென்னை உயர் நீதி மன்றம். சென்னை வந்து சேர்ந்திட்ட நான், மறுநாளே காஞ்சிக்குச் சென்றிட்டேன். அண்ணாவின் சிற்றன்னை 'தொத்தா' நோயோடு போராடிக் கொண்டிருந்தார். அவரைக் கண்டிடவே நான் காஞ்சிக்குப் போனேன். அரசின் அடக்குமுறைக்குப் பலியாகி ஆறு மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு ஏழாவது முறையாகச் சிறைப் பறவையாகியிருந்த அண்ணாவும் அப்போது பரோலில்' வெளியே வந்திருந்தார்கள்.! சின்ன வயதிலேயே அண்ணாவை வளர்தது ஆளாக்கி இந்தத் தமிழ் மண்ணுக்கே அவர் தலைமகன் ஆகிடும் அளவிற்கு அவருக்கு ஊன்றுகோலாய் உழைத்திட்டவர் 'தொத்தா' என்று அன்போடு அழைக்கப்பட்ட திருமதி இராசாமணி அம்மையார் ஆவார். அவரோ உழைத்தது போதுமென்று 31-12-63-இல் ஓய்வெடுத்துக் கொண்டு விட்டார். அவருடைய மறைவு மாமேதை அண்ணாவை மனங்குமுறிட வைத்தது. கழகத்தார் கண்களையோ பெருங்குளம் ஆக்கியது. அப்