உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/635

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலவே கோவையும் எனக்குத் தூரமில்லை என்கிற உண்மையையும் முதன் முறையாக அவை உணர்த்தின. நானும் அதுவரை அத்தனை நாட்கள் தொடர்ந்தாற் போன்று பங்கேற்றுப் பயணம் மேற்கொண்ட தில்லை. உழைப்புத் திலகமென ஒளிர்ந்திட்ட மாவட்டச் செயலாளர் உடுமலை நாராயணன் அவர்களின் திட்டமிட்ட ஏற்பாடுகளால் கொங்குநாட்டுக் கொள்கை மறவர்களின் முயற்சிகளால் என்னுடைய அந்தச் சுற்றுப் பயணத்தின்போது ரூபாய் நாற்பத்தோராயிரத்து ஐந்நூறு தேர்தல் நிதியாகத் திரட்டிட முடிந்தது. ஒரே சுற்றுப் பயணத்தில் - ஒரே மாவட்டத்தில் அதுகாறும் இத்துணைப் பெருந் தொகையைத் தேர்தல் நிதியாக அடைந்ததில்லை. எனவே, மற்ற மாவட்டங்களில் நிதி திரட்டும் அரும் பணிக்குத் தூண்டுகோலாகவும் அமைந்தது அந்தத் தொகை. வாழ்வுக்கு வழி வகுத்த தமிழ்த்தலைவன் - உலகப் பெரும் புலவன் - மக்களாட்சித் தத்துவம் உரைத்திட்ட மாமேதை - 'பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று பேசிய பகுத்தறிவுப் பகலவன் - இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து கெடுக உலகியற்றியான்!' என்று ஆண்டவனுக்கே அறைகூவல் விடுத்திட்ட புரட்சிப் பொறி, 2-6-1966 திருவள்ளுவருக்குச் சென்னை மயிலாப்பூரில் அன்று சிலையொன்று திறந்து வைக்கப்பட்டது. தமிழினத்தில்- தமிழகத்தில்- தமிழகத்தில் - பிறந்த பிறந்த போதிலும் தாரணிக்கே பொதுமறை வழங்கிய புதுமைச் சிற்பி திருவள்ளுவர். அவர் ஏற்றி வைத்திட்ட திருவிளக்கை - தேன் தமிழ்த் திருக்குறளைத் - திக்கெட்டும் பரப்பிடும் பணியையும் தன் ஒப்பற்றக் கடமையாய்க் கருதிச் செயல்பட்டு வந்துள்ளது தி. மு. கழகம். மற்றக் கட்சிகளும், அமைப்புக்களும் சமயக் கவிஞர்களையும், சாதித் - தலைவர்களையுமே போற்றிப் புகழ்ந்து கொண்டிருந்த காலத்தில், திருவள்ளுவரின் சால்பு - தகைமை - தகுதி முதலானவற்றை இனங்கண்டு தெரிந்து அவரை ஏற்றிப் போற்றிட முதன் முதல் குரல் கொடுத்த பெருமையும் தன்மானத் திராவிட இயக் கங்களையே சாரும். மறந்திடாமல், அவர்தம் வழி நடந்திடும் சட்டமன்றத்தில் நுழைந்ததும், வள்ளுவ வாதிடவும் முற்பட்டோம் வழிகாட்டிகளை பேரார்வத்துடன்தான், ருக்குச் சிறப்புச் செய்யாதது ஏன் என்று காங்கிரஸ் ஆட்சியாளரிடம். சட்டமன்றத்தில் திருவள்ளுவர் படத்தினைத் திறந்து வைத்திட வேண்டும் என்று நானும், திருவள்ளுவர் நினைவாக அரசாங்கம் விடுமுறை நாள் விட வேண்டும் என்று புலவர் 629