உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/636

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தனும், சென்னை மயிலாப்பூர் பகுதியில் திருவள்ளுவருக்குச் சிலை வைத்திட வேண்டும் என்று சகோதரர் அரங்கண்ணலும் அவ்வப் போது கோரிக்கைகளை முன் வைத்தோம். காங்கிரஸ் ஆட்சியாளர்களோ எங்கள் கோரிக்கைகளில் பொதிந் துள்ள நியாயஉணர்வினைப் பொருட்படுத்த மறுத்தனர். புறக்கணிக்கவும் துணிந்தனர். ஆனால் எங்கள் வற்புறுத்தல் வலுப்பெறவே, திரு. பக்தவத்சலனார் முதல்வராக இருந்த காலத்தில், நான் முன்னரே குறிப்பிட்டவாறு, திருவள்ளுவர் படம் திறந்து வைக்கப்பட்டது சட்ட மன்றத்தில். ஆனால் சிலை எழுப்பிட மட்டும் செயல்பட மறுத்து விட்டது காங்கிரஸ் அரசு. எனவே, தி.மு. கழகத்தின் நிருவாகப் பொறுப்பிலிருந்த சென்னை மாநகராட்சியே அந்தச் செந்நாப் போதாரின் சிலை சமைத்திடும் சீரிய பணியினை மேற்கொண்டது. அந்தச் சிலைதான் 2 - 6 - 66-இல் சென்னை மயிலாப்பூரில் திறந்து வைக்கப்பட்டதாகும். தத்துவ வித்தகராம் வள்ளுவருடைய வள்ளுவருடைய சிலையினைத் தத்துவ ஆராய்ச்சியில் தாகங்கொண்ட அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களே திறந்து வைத்ததும் குறிப்பிடத்தக்கதாகும். 'தத்துவ ஞானிகளே நாட்டின் தலைமகன்களாகக் கோலோச்சிட வேண்டும் என்னும் பேரறிஞன் பிளேட்டோவின் கனவை நினைவாக்கப் பிறந்தவர் போலத் தம்மை அறிவுக் கூர்மையால் உயர்த்திக் கொண்ட ஆற்றலாளர் டாக்டர் இராதாகிருஷ்ணன். இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இரவீந்திரநாத் தாகூருக்கு 'டாக்டர்' என்னும் இலக்கியச் சிறப்புப் பட்டத்தினை வழங்கிட விழைந்த போது, தன்னுடைய மரபுகளையெல்லாம் தானே ஒதுக்கி வைத்துவிட்டுக் கவிஞரின் இருப்பிடத்திற்கே- சாந்தி நிகேத'னுக்கே சென்று-தன் சார்பில் பட்டம் அளித்திடத் தன், பிரதி நிதியாகத் தேர்ந்தெடுத்து அது அனுப்பியது டாக்டர் இராதா கிருஷ்ணனைத்தான். அத்தகைய அறிஞர், மேதைகளுக்கெல்லாம் திருவள்ளுவர் சிலையினைத் திறந்திட முன் வந்தது என் மேதையான போன்றவர் களெல்லாம் பழைய நிகழ்ச்சிகளை நினைவுகூர்ந்து மகிழ்ந்திடத்தக்க வகையிலே அமைந்திருந்தது. 630