உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 நாடறிந்த உண்மை மே மூன்றாம் நாள் பிற்பகல் மயக்கமுற்ற நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வேளாண்மைத் துறை அமைச்சர் கோவிந்தசாமி அவர்களுக்கு பிரபல டாக்டர்கள் மிகத்தீவிர சிகிச்சைகளை அளித்தனர். கல்லீரலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக உணவுக் குழலில் ரத்தக்கசிவு ஏற்படு வதைக் கண்டு உடனடியாக அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இப்படி அவருக்கு உணவுக் குழலில் ரத்தம் கசியக் கூடிய நோய் ஏற்கனவே ஒருமுறை வந்திருக்கிறது. நாகர் கோயில் நாடாளு மன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்காகச் சென்றபோது இதே போல் ரத்தவாந்தி எடுத்து மயங்கி விழுந்து விட்டார். ஒரு மாத கால சிகிச்சைக்குப்பிறகு உடல் நலம் பெற்றார். ஆனால் இந்த முறை அவரை உயிர் பிழைக்க வைக்கச் செய்த முயற்சிகள் இறுதியில் பயனற்றுப் போய் விட்டன. அறுவை சிகிச்சைக்குப் பிறகு மயக்கம் தெளிந்து ஓரளவு பேச முடிந்தது அவரால்! நானும் மற்ற அமைச்சர்களும் எங்களது பல்வேறு நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்துவிட்டு மருத்துவ மனையிலேயே தங்கி, கோவிந்தசாமி அவர்களைக் கவனித்துக் கொண்டோம். 1952-ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் அவருக்கும் எனக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. அப்போது நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் தி. மு. கழகம் கலந்து கொள்ளவில்லை. இந்திய அரசியல் சட்டம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மையான பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக இல்லை என்பதைச் சுட்டிக் காட்டும் வகையில் அந்த அரசியல் சட்டத்தின் அடிப்படையில் நடைபெறும் முதல் பொதுத் தேர்தலில் கழகம் கலந்து கொள்வ தில்லையென்று முடிவெடுத்த போதிலும் கழக ஆதரவு பெற்ற சுயேச்சையாளர்கள் சிலரையும், உழைப்பாளர் கட்சி, காமன் வீல் கட்சி ஆகிய கட்சிகளையும் வெற்றி பெறச் செய்யப் பணியாற்றியது என்ற விபரங்களை ஏற்கனவே குறிப்பிட்டிருக் கிறேன். திரு.கோவிந்தசாமி அவர்கள் அந்தத் தேர்தலில் உழைப் பாளர் கட்சியின் சார்பாக தென் ஆற்காடு மாவட்டத்தி உள்ள