உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 121 நீதிD அண்ணா அவர் விக்ரவாண்டி தொகுதியில் போட்டியிட்டார். களும் நானும் கழகச் சார்பில் தமிழக முழுவதும் பல்வேறு தொகுதிகளுக்குச் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டோம்! முதன் முதலில் பெரிய அளவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங் களில் கலந்து கொள்வது. 1952-ஆம் ஆண்டுதான்! அதனால் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளை முறையாக வகுத்துக் கொள்ள இயலவில்லை. சனிக்கிழமையன்று மாயூரத்தில் (மயிலாடுதுறை) பேசி விட்டு, கொள்ளிடம் என்ற ஊருக்கருகே பேசிவிட்டு, விடியற் காலை அங்கிருந்து புறப்பட்டுக் காரிலேயே சிவகாசி (ராமனாதபுரம் மாவட்டம்) சென்று, அங்கே ஆறுமுகசாமி நாடாருக்காக நாலைந்து கூட்டங்கள் பேசிவிட்டு, ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி களை முடித்து அங்கிருந்து புறப்பட்டு திங்கட்கிழமை மாயூரத் துக்கு அருகில் சீர்காழியில் இராமநாத முதலியாருக்காகத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்குப் போய்ச் சேர்ந்தேன். இதற்குள் காரோட்டி மயக்கமுற்றுத் தஞ்சாவூருடன் திரும்பிவிடவே நண்பர் கரந்தை சண்முகவடிவேல் என் காரை ஓட்ட வேண்டி நேர்ந்தது. இப்படிப்பட்ட சுற்றுப்பயண நிகழ்ச்சியிலேதான் கோவிந்தசாமி அவர்களுக்காகத் தேர்தல் பிரச்சாரம் செய்ய விக்ரவாண்டி போய்ச் சேர்ந்தேன். அப்பொழுதுதான் "வேக்சால்" கார் ஒன்று புதிதாக வாங்கியிருந்தேன். விக்ரவாண்டி தொகுதியில் இரவு முழுதும் கரடுமுரடானதும் பாறைகள் மோதக்கூடியதுமான பாதைகளில் பயணம். பல இடங்களில் கூட்டம். பொழுது விடிந்தும்கூட கூட்டம் முடியவில்லை. இறுதியாக அவர் என்னைக் கட்டித் தழுவிக் கொண்டு “நான் வெற்றி பெற்றுவிட்டேன். போய் வாருங்கள், நன்றி" எனக்கூறி வழியனுப்பி வைத்தார். அந்தத் தேர்தலில் பெருமிதமான வெற்றியும் பெற்றார். ஆனால் அவர் இணைந்திருந்த உழைப்பாளர் கட்சிக்கு அமைச்சர் பதவியில் ஆசை வந்து விடவே அதன் தலைவர் ராமசாமிப் படையாச்சி அவர்களும், அவருடன் வெற்றி பெற்ற அந்தக் கட்சியினரும் ராஜாஜி அவர்களின் முயற்சியால் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விட்டனர். பதவிக்காகக் "கட்சி தாவல்" என்பது தமிழ்நாட்டில் 1952-ல் ஆரம்பமாயிற்று. ஆனால் திரு. கோவிந்தசாமி அவர்கள் கழகம் செய்த நன்றி மறக்காமல்- காங்கிரசில் சேர மறுத்து, விட்டார். அதன் காரணமாக அண்ணா அவர்கள் உள்ளத்திலும்