உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி - 179 நான் உறுதியாக இருந்தேன். நான் கலந்துகொள்ள இயலாததற் கான காரணத்தை விளக்கி மாணவ உடன்பிறப்புக்களுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதி அனுப்பினேன். அந்த விழாவில் முன்னாள் முதலமைச்சர் பெரியவர் பக்தவத்சலம், சிலம்புச்செல்வர் ம.பொ.சி., நாவலர் நெடுஞ்செழியன், பல்கலைக்கழக துணைவேந்தர் சுந்தரவடிவேலு. இந்திய யூனியன் முஸ்லீம்லீக் தலைவர்களில் ஒருவரான அப்துஸ் சமத், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்களில் ஒருவரான ஏ.எஸ்.கே. அய்யங்கார் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கு என். வி. என். சோமு தலைமையேற்றார். அந்த விழாவில் நாவலர் பேசும்போது "கலைஞர் கருணாநிதிக்கு வயது 46 என்றார்கள்; ஆயினும் திராவிடர் கழகத் தொண்டர் கருணாநிதிக்கு வயது 37 என்றும், எழுத்தாளர் கருணாநிதிக்கு வயது 26 என்றும், பேச்சாளர் கருணாநிதிக்கு வயது 25 என்றும், கலைஞர் கருணா நிதிக்கு வயது 23 என்றும், தி.மு.கழக முன்னணி வீரர் கருணா நிதிக்கு வயது 20 தான் என்றும், போராட்ட வீரர் கருணாநிதிக்கு வயது 14 என்றும், கழகப் பொருளாளர் கருணாநிதிக்கு வயது 9 என்றும், அமைச்சர் கருணாநிதிக்கு வயது 22 என்றும், முதலமைச்சர் கருணாநிதிக்கு வயது ஆறு மாதம் என்றும், கழகத் தலைவர் கருணாநிதிக்கு வயது ஆறு நாள்தான் என்றும் கூறியதோடு இப்படி, பல்வேறு திறமைகள் கொண்ட அவரை அத்தனை பேரும் பாராட்டுகிறீர்கள். அவரைப் பாராட்டுவதை என்னைட் பாராட்டுவதாகத்தான் நான் கருதுகிறேன். எனக்கும் அவருக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் கிஞ்சிற்றும் இல்லை. மாணவ உலகம் கலைஞரைப் பின்பற்றி அவரை அடிப்படையாகக் கொண்டு தங்களுக்கென தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டார். அதே விழாவில் பேசிய சிலம்புச் செல்வர்-"இன்று காலை பத்திரிகையைப் பிரித்ததும் கணபதியா பிள்ளையின் பரிந்துரையை ஏற்று விவசாயத் தொழிலாளர்களுக்கு நியாயக்கூலி வழங்க வகை செய்யும் வகையில் அவசரச்சட்டம் பிறப்பித்திருப்பதைப் பார்த்தேன். இங்கே மேடையில் கலைஞர் அவர்கள் இருந்தால் கட்டித் தழுவி பாராட்டுக்கள் கூற வேண்டுமென்று தேடித் தேடிப் பார்த்தேன். அவர் இல்லை. சமுதாயத்தின் மேல் தளத் தில் உள்ள சிலருக்காக அல்ல-அடித்தளத்தில் உள்ள பலருக் காக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது கடந்த வாரம் டெல்லியில்; இந்த வாரம் சென்னையில், டெல்லிக்குச் சென்னை