உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 ☐ 8 நெஞ்சுக்கு நீதி எந்த வகையிலும் சளைத்தது அல்ல என்பதை கலைஞர் இதன் மூலம் நிரூபித்து விட்டார்" என்று பாராட்டினார். முன்னாள் முதலமைச்சர் பெரியவர் பக்தவத்சலம் அவர் களோ-"கருத்து வேற்றுமைகள் சில பிரச்சினைகளில் இருக் கலாம்; எல்லாவற்றிலும் கருத்து வேற்றுமை இருப்பது கூடாது; இருந்தால் உயர்வடைய முடியாது. தமிழக முதலமைச்சர் கலைஞர்; சிறந்த கலைஞர்; அவர் இன்று முதலமைச்சராக இருக் கிறார். முதலமைச்சராக கலைஞர் இருப்பது சிறப்புடையதாக இருக்கிறது. கலை என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நெருங்கியிருக்க வேண்டிய ஒன்று. 45 வயது முடிந்து கலைஞருக்கு 46 வயது நடந்து கொண்டிருக்கிற நிலையில் அவர் 45 ஆண்டுகள் எப்படி வாழ்ந்து இன்று முதலமைச்சராக ஆகியிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். பெரியவர்களின் வரலாறுகளை நாம் புறக்கணிக்கக்கூடாது. கலைஞர் அவர்களின் அவர்களின் வரலாற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் பத்திரிகையில் நெஞ்சுக்கு நீதி என்று தமது வரலாற்றை எழுதி வருகிறார். கொஞ்சம்தான் எழுதியிருக்கிறார். ருசிகரமாக இருக்கிறது. அவரது வரலாற்றைப் படிக்கும்போது அதிலுள்ள கருத்துக்கள் நம்பிக்கை ஏற்படுத்தும் நிலையில் இருக்கிறது. அவர் எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார் என்பது அதில் தெரிகிறது. கலைஞர் எவ்வாறு வாழ்க்கையில் அபிவிருத்தி அடைந்திருக் கிறார் என்பதும் விளங்குகிறது. கலைஞர் பெரும் அரசியல்வாதி யாக இருக்கிறார். கலையைப்பற்றி அரசியல்வாதிகளுக்கு அவசியம் தெரிய வேண்டும். கலைஞரின் வாழ்க்கையைக் காணுகிறபோது வாழ்க்கையில் அவர் தனது திறனால், ஆற்றலால், முயற்சியால், புத்திக்கூர்மை யால் அவர் இன்று உயரியபதவியை அடைந்திருக்கிறார். முயற்சி யோடு காரியங்களில் ஈடுபட்டால், சீரியமுறையில் ஈடுபட்டால், உழைத்தால் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையை நமக்கு ஊட்டுகிறார். அவர் முதலமைச்சராக இருப்பதால் மட்டுமல்ல; நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்தபோதே எனது கவனத்தைக் கவர்ந்த வராக இருந்தார். எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தபோதே அவரது திறன் தெரிந்தது. நான் உள்ளூர பாராட்டியிருக்கிறேன்; ஏன்? வெளிப்படையாகவும் சிலசமயம் பாராட்டியிருக்கிறேன்.