உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 263 நாட்டுக்கும் உலகினுக்கும் நீண்ட காலம் பயன்பட வேண்டு மென்று எல்லாம் வல்ல கடவுளை வேண்டிக் கொள்கிறேன்” என்று எழுதியிருந்தார். தர்மபுரம் தலைவர், என்னை வரவேற்றுப் பாராட்டும் வி ழாவொன்று மயிலாப்பூர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு தெய்வீகப் பேரவையின் சார்பில் நடைபெற்றது. ஆதினகர்த்தர், காஞ்சி ஞானப்பிரகாச ஆதினத் குன்றக்குடி அடிகளார், சுந்தரலிங்க அடிகளார், திருவண்ணாமலை ராமனாத சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு பாராட்டினர். அந்த விழாவில் நான் நன்றி தெரிவித்து உரையாற்றியபோது, "கடவுளை நாம் ஏற்றுக் கொள்கிறோமா என்பதைவிட, கடவுள் நம்மை ஏற்றுக் கொள்கிறாரா என்பதுதான் முக்கியம். எனவே கடவுள் நம்மை ஏற்றுக் கொள்ளும் வழியில் நாம் நடைபோட வேண்டும். கடவுள் ஏழைகளின் புன்னகையில் இருக்கிறார். அந்தப் புன்னகையில் கடவுளைக் காணத் துடிப்பவன் நான்” என்று குறிப்பிட்டேன். 1970-ஆம் ஆண்டு நிதிநிலை நிதிநிலை அறிக்கையில் பதினைந்து ஸ்டாண்டர்டு ஏக்கரா உச்சவரம்பு கொண்டு வரப்படும் என்று அறிவித்ததற்கு இணங்க, அந்த ஆண்டே, அந்தச் சட்டமன்றத் தொடரிலேயே மார்ச் 31-ந் தேதி நில உச்சவரம்பு மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதாவில் கூறப்பட்டிருந்தாவது: 1961-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நில உச்சவரம்புச் சட்டம் ஒன்று முதன் முதலாகக் கொண்டு வரப்பட்டது. ஐந்து பேர் அடங்கிய ஓர் குடும்பத்திற்கு முப்பது ஏக்கர் என்று அதில் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகும் நில உறவு முறையில் ஏற்றத் தாழ்வுகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. மேற்படி சட்டம் அமலாக்கப்பட்ட பிறகும் பொது நலனுக்கு விரோதமாக சில மனிதர்களிடமே அதிக நிலம் சேர்ந்திருக்கிறது. நிலச் சீர்திருத்தத்தையொட்டிய மற்றொரு நடவடிக்கை யாக இப்பொழுது இந்தச் சட்டம் கொண்டு உரப்படுகிறது நில உறவு முறைகளில் பல ஏற்றத்தாழ்வைக் குறைக்க வேண்டுமென்ற குறிக்கோளை எய்தும் பொருட்டு உச்சவரம்பை 30 ஏக்கரிலிருந்து 15 ஏக்கராவாகக் குறைக்க வேண்டி அவசியம் உணரப்பட்டுள்ளது.