உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 நெஞ்சுக்கு நீதி இந்த மசோதா அந்தக் குறிக்கோளை நிறைவேற்றப் பயன்படும். 1970 பிப்ரவரி 26-ந் தேதி முதல் இந்தச் சட்டம் அமலுக்கு வந்ததாகக் கருதப்படும். இந்த மசோதா அவையிலே விவாதத்திற்காக 1970-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி எடுத்துக் கொள்ளப்பட்டது. சுதந்திரா கட்சியில் கட்சியில் அப்போதிருந்த ஹண்டே அவர்களும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திண்டிவனம் ராமமூர்த்தி அவர்களும், குடியரசுத் தலைவரின் அனுமதி பெறாமல் மசோதாவைக் கொண்டு வருவது அரசியல் சட்டத்திற்கு முரணானது என்ற பிரச்சினையைக் கிளப்பினார்கள். அதற்குப் பதிலளித்த நிதியமைச்சர் மதியழகன், குடியரசுத் தலைவரின் அனுமதிக்காக முன்பே அனுப்பப்பட்டிருக் கிறது என்றும், முன்கூட்டியே அனுமதி என்பது தேவையில்லை என்றும், இந்தப் பொருள் மாநில அரசுக்குரியதாக வரும் பட்டியலில் இடம் பெற்றதால் இதைத் தன்னிச்சையாகச் செய்யலாம் என்றும், மேலும் குடியரசுத் தலைவரின் அனுமதி பெற வேண்டுமென்றுதான் இருக்கிறதே தவிர முன்கூட்டியே பெற வேண்டும் என்பதல்ல என்றும், மேலும் மத்திய அரசாங்கத்திடமிருந்து இந்த நிலச் சீர்திருத்த மசோதாவைப் பிரேரேபிக்க அனுமதி தருகிறோம் என்று தந்தி வந்திருப்ப தாகவும், எனவே அரசியல் சட்டத்திற்கு முரணானது எதுவுமில்லை என்றும் கூறினார். அதுபற்றி பேரவைத் தலைவர் தன் முடிவைத் தெரிவிக்கும் போது, இந்த மசோதாவைப் பிரேரேபிக்கலாம் என்று தந்தி வந்திருக்கிறது. ஆளுநரின் அனுமதி பெற்றது பற்றித்தான் அறிவிக்கப்படுவதுண்டே தவிர குடியரசுத் தலைவரின் அனுமதி பெற்றது பற்றி அவைக்கு அறிவிப்பதில்லை என்றும், இந்த மசோதாவிற்கு ஆளுநர் அனுமதி தந்திருக்கிறார் என்றும், சில சட்டங்களை விரைவாகக் கொண்டு வந்து நிறைவேற்றியவுடன் குடியரசுத் தலைவருக்குத் தெரிவித்து அனுமதி பெற விதிமுறை வகுக்கப்பட்டிருக்கிறது என்றும், ஆகவே இந்தச் சட்டம் கொண்டு வருவதில் எந்தவித முறைகேடும் நடைபெற்று விடவில்லை என்றும் கூறிய பிறகு மசோதா மசோதா விவாதத்திற்கு வந்தது. விவாதம் முடிவுற்றதும் சுதந்திரா உறுப்பினர் ஹண்டே அவர்கள் எழுந்து இந்த மசோதாவை பொதுமக்களின் கருத்தை