உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 நெஞ்சுக்கு நீதி நன்மைகளில் நாட்டம் செலுத்தவும், பொதுப்பணம் விரயமாவ தடுப்பதற்காகவும், தைத் நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சி,பஞ்சாயத்து ஆகியவைகளுக்கான தேர்தலை ஒரே நேரத் தில் நடத்துவது சிறந்தது என்று நான் கருதுகிறேன். இது ஒரு நிபுணர் குழு அமைத்து பரிசீலிக்க வேண்டிய பிரச்சினையாகும், தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஏழு கட்சி முற்போக்குக் கூட்டணி யில் தி.மு. கழகமும், இந்திரா காங்கிரசும் பங்கு கொண்டுள்ளன. இந்தக் கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு செய்துகொள்வது குறித்து பிரதமர் இந்திராவுடனும் ஜெகஜீவன்ராமுடனும் பரவ லாகப் பேசப்பட்டது. தி. மு. க. பொதுக்குழு கூட்டத்தின் முடி வுக்குப் பின்னர் மாநில அளவில் மற்றத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவோம்" என்று கூறினேன். டெல்லியிலிருந்து திரும்பியபோது நான் பயணம் செய்த விமானத்தில்தான் காமராஜர் அவர்களும், சி. சுப்பிரமணியம் அவர்களும் சென்னை வந்தார்கள். சென்னையில் ஜனவரி 3-ஆம் தேதியன்று கூடிய செயற் குழுவும், பொதுக் குழுவும் தமிழக சட்டமன்றத்தைக் கலைத்து விட்டு சட்டசபைத் தேர்தல்களை நாடாளுமன்றத் தேர்தலுடன் க் ஒருங்கிணைத்து நடத்துவதா என்பதைப்பற்றி முடிவெடுக்க கழகத் தலைவராக உள்ள எனக்கும், பொதுச் செயலாளராக இருந்த நாவலருக்கும் அதிகாரமளித்து ஒரு தீர்மானத்தை நிறை வேற்றியது. அந்தத் தீர்மானத்தை நண்பர் மதுரை மதுரை முத்து முன்மொழிய அனைத்து மாவட்டக் கழகச் செயலாளர்களும் வழி மொழிந்தனர். இதற்கு மறுநாள் ஜனவரி 4 - ஆம் தேதி காலை 11-15 மணிக்கு ஆளுநரைச் சந்தித்து-அன்று காலையில் கூடிய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினைத் தெரி வித்ததின் பேரில் கவர்னர் மாளிகையிலிருந்து கீழ்க்கண்ட பிரகடனம் வெளியிடப்பட்டது. "தமிழக முதல்வர் திரு.மு.கருணாநிதி இன்று காலை 11-15 மணிக்கு தமிழக ஆளுநரை ஆளுநர் மாளிகையில் சந்தித்து தமிழ்நாடு சட்டமன்றத்தை 1971 ஜனவரி 5-ஆம் தேதி முதல் கலைக்குமாறு பரிந்துரை கூறுவதெனவும்-நாடாளுமன்றத் தேர்த லுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்துவதெனவும், சோஷலிச - மதச்சார்பற்ற கொள்கைகளை - செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மக்களிடமிருந்து புதிய கட்டளை யைப் பெறுவது எனவும் அமைச்சரவை செய்த முடிவினை