உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 273 ☐ தெரிவித்தார். ஆழ்ந்த கவர்னரிடம் தமிழக முதல்வர் பரிசீலனைக்குப்பின் ஆளுநர், இந்த விஷயத்தில் அமைச்சரவை யின் பரிந்துரையை ஏற்று 1971 ஜனவரி 5-ஆம் தேதி முதல் தமிழக சட்டமன்றத்தைக் கலைக்க உத்தரவிட்டார்." இந்த அறிவிப்புக்குப் பிறகு, செய்தியாளர்கள் என்னைச் சந்தித்து சட்டமன்றத்தைக் கலைக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டார்கள். அதற்கு நான் அளித்த பதில், "இந்திய நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் முன் கூட்டியே நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. தேர்தல் நடைபெறும் என்று உறுதியானவுடன் தமிழ்நாட்டில் அதன் விளைவுகள் பற்றியும் நடத்த வேண்டிய சூழ்நிலைகள் குறித்தும் ஆலோசித்து வந்தேன். இன்றைய சட்டப்பேரவை இன்னும் ஓராண்டு காலம் தொடர்ந்து பதவியில் நீடிக்கலாம் என்பது உண்மை. ஆனால் ஆண்டுதோறும் மக்கள் மாறி மாறி தேர்தல்களைச் சந்திக்கும் நிலையால் ஆட்சி இயந்திரம் சரிவரச் செயல்படாதி ருக்கலாம். எடுத்த கொள்கை முடிவுகளை ஆட்சி இயந்திரத்தின் வாயிலாக நிறைவேற்ற முடியாத தேக்க நிலை ஏற்படவும், பொது மக்களுக்கு சங்கடங்களை உருவாக்கவும் வழி வகுக்கும் என்று கருதுகிறேன். இன்னும் ஓராண்டு காலம் கழக அமைச்சரவை அதிகாரத் தில் இருக்கலாமென்றாலும் பொது மக்களது நன்மைக் கருதியும் பாராளுமன்றத் தேர்தலுடன் ஒருங்கிணைத்து தேர்தலை நடத்து வதே பொருத்தமாகும் என்று தி. மு. கழகச் செயற்குழு, பொதுக் குழு உறுப்பினர்கள் அளித்த கருத்துக்களையும் அறிந்தேன். சமதர்ம இந்திய நாட்டு அரசியலில் சமதர்ம சமுதாயத்தை அமைக்க வேண்டும். சமய சார்பற்ற அரசு கொள்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கருத்துக்கள் பலமான விவாதத் திற்கு உரியவைகளாகியிருக்கின்றன. இந்த நோக்கங்களை நிறைவேற்றவும் தேவையான சட்டங் களை இயற்றவும் திட்டங்களைச் செயல்படுத்தவும் கழக அரசு நடவடிக்கைகள் எடுத்தும், மத்திய அரசு எடுத்த இதுபோன்ற கொள்கை நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்தும் வந்திருக்கின்றது.