உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488 நெஞ்சுக்கு நீதி காலத்திலேயே அவர் மதிக்கத்தகுந்த ஒரு தலைவர்; பாராட்டத் தகுந்த ஒரு பெரியவர்; ஒரு தியாகி; ஒரு உழைப்பாளி; தொண்டர்க்குத் தொண்டர்; தலைவர்க்கு தலைவர் என்பதை நாங்கள் உணர்ந்தே அதை உரைத்தே வந்திருக்கிறோம்.' மேலும் அந்த நிகழ்ச்சியில் நான் உரையாற்றும்போது நான் முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற பிறகு காமராஜரின் பிறந்த நாள் விழா கொண்டாடுவதற்காக நண்பர் தண்டாயுதபாணி அவர்கள் மாணவர்கள் சார்பில் என்னிடம் தேதி கேட்டபோது, நான் அந்தத் தேதியில் வேறொரு நிகழ்ச்சிக் காக தேதி கொடுத்ததை ரத்து செய்து விட்டு காமராஜருடைய பிறந்த நாள் விழாவிற்கு வருவதற்கு ஒப்புதல் தெரிவித்தேன். நண்பர்கள் திகைத்துப்போய், நீங்கள் வரமாட்டீர்கள் என்று நினைத்தோம்; கேட்க வேண்டுமென்பதற்காகத்தான் கேட்டோம் என்று கூறியபோது நான் அவர்களிடம் "நாங்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு அளிக்கின்ற மரியாதை இது என்று நினைக்க வேண்டாம். உழைப்பிற்கு, தியாகத்திற்கு தன்னலமற்ற தொண்டிற்கு நாங்கள் அளிக்கின்ற மரியாதை இது என்று கூறியதையும் நினைவூட்டினேன், பின்னர் சட்டப் பேரவையில் 22-10-75-ல் காமராஜருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேறியபோது விரைவில் பேரவையில் காமராஜர் படம் திறந்து வைக்கப்படுமென்றும் அறிவிப்பு செய்தேன். offe