உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 Pa காமராஜர் நினைவு போற்றிய கழகம் காமராஜர் அவர்களின் இறுதிக்காலத்தில் நான் அவருடன் எந்த அளவுக்குத் தொடர்பு கொண்டிருந்தேன் என்பதை நான் எடுத்துச் சொல்வதைக் காட்டிலும் முன்னாள் குடியரசுத் தலைவரும் காமராஜரின் மிக நெருங்கிய நண்பருமான நீலம் சஞ்சீவி ரெட்டி அவர்கள் அண்மையில் இரண்டு திங்களுக்கு முன்பு எனது மணிவிழாவுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருப்பதை எடுத்துக்காட்டுவது நல்ல சாட்சியத்துடன் கூடிய ஒன்றாகும். "இருண்ட நெருக்கடி நிலைக்காலத்தில் நானும் கருணாநிதியும் இணைந்து பாடுபட்டதை நினைவு கூர்கிறேன். நெருக்கடி நிலையை எதிர்ப்பதால் தனது முதலமைச்சர் பதவிக்கு ஆபத்து என்ற போதிலும் கருணாநிதி அவர்கள் சர்வாதிகாரத் திட்டங்களை எதிர்ப்பதில் உறுதியாக இருந்தார். நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட முதல் மூன்று மாத காலம் நானும் கருணாநிதியும் காமராசரின் வழி காட்டுதலையும் ஆசியையும் பெற்றோம்." இதனை நான் சஞ்சீவி ரெட்டியார் அனுப்பிய மணிவிழா வாழ்த்தாக மட்டும் நான் கருதவில்லை. இந்திய நாட்டு வரலாற்றின் சோதனை மிகுந்த கட்டத்தில் பெரும்பாலான தேசத் தலைவர்கள் சிறையிலே அடைக்கப்பட்டிருந்த போது-நாடு எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்பதற்குக் கூடச் சுதந்திரத்தை இழந்திருந்த நேரத்தில் உளம் நொந்து - உடல் நலிந்து படுக்கையில் இருந்த காமராஜருடனும், தேச விடுதலைப் போரில் முக்கிய பொறுப்பு வகித்த தளகர்த்தர்களில் ஒருவரான நீலம் சஞ்சீவி ரெட்டியாருடனும் நான் கொள்கை உறுதி வாய்ந்த உறவுக்கூடிருந்த துணிவு மிக்கக் கிடைத்த பரிசாகவே அந்த வாழ்த்தினை நான் மகிழ்வுடன் வரவேற்றுப் பூரித்தேன். நெருக்கடி நிலைப் பிரகடனமான பிறகு ஜூலை-ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்களில் சஞ்சீவி ரெட்டி அவர்கள் சென்னைக்கு அடிக்கடி வந்தார். நான் ஜூலை முதல் வாரத்தில் காமராஜரை