உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 521 அன்று. காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துகிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அங்கிருந்து புறப்பட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டப் பணிகளைப் பார்வையிடச் சென்றேன். நான் விரும்பியவாறு திருவாரூர்த் தேர் போன்ற முழுத் தோற்றமும் வள்ளுவர் கோட்டத்தில் வள்ளுவர் சிலை அமையும் இடத்தில் ஏற்படுவதற்கு அந்தத் தேர் வடிவத்தில் 'தொம்பை" கள் தொங்கவிடுமாறு யோசனை கூறினேன். பிற்பகல் இரண்டு மணி வரையில் அங்கேயே இருந்து கோட்டப்பணிகள் பற்றி சிற்பிகளுடன் விவாதித்து விட்டு வீட்டுக்கு வந்தேன். 1 அன்று மாலை கவர்னர் கே.கே.ஷா அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட காந்தியடிகள் நினைவு நாள் கிண்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினேன். விழாவுக்கு ஆளுநர் ஷா அவர்கள் தலைமை ஏற்றிருந்தார். திருமதி எம். எஸ். சுப்புலட்சுமி அவர்கள் காந்தி யடிகளைப் பற்றிய பாடல்களை இசைத்தார். விழாவில் அவர்களும், ம.பொ.சி. அவர்களும் ஆர்.வெங்கட்ராமன் கலந்து கொண்டனர். "காந்தியடிகளும் தலைவர்களும் பெற்றுத் அவர் அணியில் நின்று தியாகத் தந்த சுதந்திரத்தையும் அவர்கள் போற்றிய ஜன நாயகத்தையும் எல்லாவிதமான ஆபத்துக்களிலு மிருந்தும் நாம் காத்திட வேண்டும்" என்று எனது உரையில் குறிப்பிட்டேன். காந்தியடிகளின் நினைவுநாள் விழாவில் ஜனவரி 30-ந் தேதி மாலையும், 31-ந் தேதி காலையும் உரையாற்றிய கவர்னர் கே.கே.ஷா அவர்கள்; 'இந்தியாவில் காந்தியடிகளின் அடியொற்றி நடைபெற்று வருகிற ஆட்சியாகத் தி.மு.க. ஆட்சி விளங்குகிறது" எனக் கூறினார். 30-ந் தேதி காந்தி நினைவு நாள் நிகழ்ச்சி முடிவுற்றதும் அருகாமையில் கட்டப்பட்டு வந்த காமராஜர் நினைவு மண்டபத்தைப் பார்வையிடச் சென்றேன். அந்த மண்டப முகப்பில் மிகப் பெரிய மிகப் பெரிய "இராட்டை" ஒன்று இடம் பெற வேண்டுமென்று கூறியிருந்தேன். அதை எங்கே, எப்படி அமைக்க வேண்டுமென்பதை யெல்லாம் குறித்து அங்கிருந்த அலுவலர்களிடம் கலந்து பேசி விட்டுப் புறப்பட்டேன்.