உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

522 நெஞ்சுக்கு நீதி [ மறுநாள் காலையிலும் கிண்டியில் கவர்னரும், கழக அமைச்சர்களும் கலந்து கொண்ட காந்தியடிகள் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று மாலை சென்னை டான்பாஸ்கோ பள்ளியின் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக 5 மணி அளவில் சென்றேன். அந்த விழாவில் எம்.ஏ.சிதம்பரம் செட்டியாரும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். விழாவுக்கு என்னுடன் தம்பி துரைமுருகனும் வந்திருந்தார். டான்பாஸ்கோவில் ஒரு கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவைச் செய்து விட்டு, மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினேன். அநேகமாக முதலமைச்சர் என்ற நிலையில் நான் கலந்து கொள்ளும் கடைசி நிகழ்ச்சியாக இது இருக்கும்" என்று எனது உரையினிடையே நான் சொன்னதும், விழாவுக்கு வந்திருந்தோர் 'அப்படிச் சொல்லாதீர்கள்!" என்று உணர்ச்சி பொங்க ஒலியெழுப்பினர். 06 மாலை ஆறரை மணி அளவில் விழா முடிவுற்றது. நானும் துரைமுருகனும் காரில் ஏறி வீட்டுக்குப் புறப்பட்டோம். வீட்டு வாசலில் இறங்கி உள்ளே செல்வதற்குப் படியேறுவதற்கு முன்பே எனது மருமகன்கள் அமிர்தம், செல்வம் இருவரும் கையில் ஒரு துண்டுத் தாளை வைத்துக் கொண்டு சிரித்தவாறு ‘ஆட்சியைக் கலைத்து விட்டார்கள்" என்றனர்! செய்தி நிறுவன இயந்திரத்தில் அடிக்கப்பட்ட செய்தி தான் அது! அப்பாடா! சஸ்பென்ஸ் முடிந்தது!" என்று கூறிக் கொண்டே, தெருப் பக்கம் திரும்பிப் பார்த்து, நான் பயன்படுத்திக் கொண்டிருந்த அரசாங்கக்காரை உடனே தலைமைச் செயலகத்திற்கு எடுத்துச் சென்று விடுமாறு சொல்லி விட்டு மாடிக்குச் சென்றேன். என்னிடம் பணியாற்றிய தனி அலுவலர்கள் கண்ணீர் வடித்துக் கதறியழுதனர். "சே! இது என்ன; பைத்தியக்காரத்தனம்! தைரியமாக இருங்கள்!" எனக் கூறி விட்டு அந்த நல்ல செய்தியை நண்பர் களுக்குச் சொல்ல "டெலிபோனை" எடுத்தேன்! என்ன ஆச்சரியம்! அதற்குள் என் டெலிபோன் இணைப்பு துண்டிக்கப் பட்டு விட்டது. சில நிமிடங்களில் எப்படித்தான் செய்தி சென்னை முழுவதும் பரவியதோ தெரியாது - வீட்டு வாயிற்புறத்தில் ஆயிரக் கணக்கானோர் அழுது புலம்பியவாறு கூடிவிட்டனர்.