உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 557 ☐ வெள்ளாங்கோவிலில் கழக வழக்கறிஞர் சண்முகசுந்தரத் திற்கும் கனகாம்பரத்திற்கும் நடைபெற்ற மணவிழாவில் தலைமை யேற்று மண விழாவினை நடத்தி வைத்தேன். மண விழாவிலே கூட நான் பேசக்கூடாது என்று காவல்துறையினர் ஒலிபெருக் கிக்கான லைசென்ஸ் வழங்கிடவில்லை. 'மெகபோன்' ஒன்று கொண்டு வரச் சொல்லி, அதை தோளிலே மாட்டிக்கொண்டு, அந்த மணவிழாவிலே மணமக்களை வாழ்த்தி உரை யாற்றினேன். அடுத்து புஞ்சை புளியம்பட்டியில் நடைபெற்ற சாமிநாதன் இல்லத் திருமணத்திலும், ஈரோட்டில் நடைபெற்ற அர்ச்சுன் இல்லத் திருமணத்திலும் கலந்து கொண்டேன். (சாமிநாதன் அப்பொழுது சிறையில் இருந்தார்.) அன்று ஒரு நாள் நிகழ்ச்சியில் மட்டும் கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதி மட்டும் இருபதாயிரம் ரூபாய்க்கு மேல் விசாரணைக் கமிஷன் செலவு நிதியை அளித்தது. ஈரோட்டிலிருந்து சென்னை திரும்பியதும், அதற்கு முன்பு ஈரோட்டிற்கு நான் பலமுறை சென்றபோது அளித்த வரவேற்பினையும், 1945-ஆம் ஆண்டு நான் முதன்முதலாக ஈரோடு சென்று பெரியாரிடம் பணியாற்றிய நிழ்ச்சிகளையும் ஞாபகடுத்தி "பள்ளிக்குச் சென்று வந்தேன்" என்ற தலைப்பில் முரசொலியில் கடிதம் எழுதினேன். Offe