பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே சாமியெனும் பெயராலே தமிழினத்துப் பெண்களுக்குப் பொட்டுக் கட்டிக் காமுகர்கள் துய்ப்பதற்குக் கருணை மொழி புகல்கின்றார் காஞ்சிப் பீடப ; பூமியிலே மீண்டுமதைப் புதுப்பிக்க முயல்கின்றார் பூணு ல் மார்பர்; காமுகர்க்குத் துரதுசெலக் கடைவழியில் நிற்கின்றார் கடவுள் துரதர். 'பரத்தைமையை நாடாதீர் பரத்தினையே நாடுங்கள் பாவஞ் செய்யேல் அறச்செயலே செய்க"வென அறிவுரைகள் ஆற்றாமல் அதைவி டுத்துப் பரத்தை மைக்குக் கடை திறப்புச் செய்கின்றார்: பாழ்நரகிற் பதிவு செய்யப் புறப்படவே விருப்பமெனில் போகட்டும் நாமவர் க்குப் புகல்வ தென்ன? கடவுளை யும் ம ைறகளை யும் கட்டுரைத்த கதைகளையுங் காட் டிக் காட்டி மடமையிலே வீழ்த் திஎ மை மாட்டினத்திற் கீழாக மதித்து வந்தீர் த டமனத்தேம் நீர் விரித்த தந்திரங்கள் தெரியாமல் தாழ்ந்து கெட்டோம் எடுபிடிகள் என இனியும் எமைக்கருதின் எரிமலைகள் வெடிக்கக் காண் பீர். 100