பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே கடைச்சரக்கால் உடலழகு காண்பவர்க்குத் தெரிவுறவே கட்டி விட்டுக் கடைத்தெருவில் திரிவதுவா கன்னியர் க்கு முன்னேற்றம்? கலைகள் யாவும் படிப்பதிலே நூல்பலவும் படைப்பதிலே இல்லறத்துப் பாங்கு கற்று A நடப்பதிலே உயர்பதவி தொடுப்பதிலே முன்னேற்றம் நாட வேண்டும். தோற்றத்தால் நடையுடையால் தொழத்தக்க நாகரிகம் தோகை யர்க்குச் சாற்றத்தான் விழைகின்றேன் சால்புநெறி கண்டறிந்து சார்தல் வேண்டும்; ஏற்றத்தால் பெண்மகளிர் மாநாடு கூட்டிடுவோர் இழிவைச் சற்றே மாற்றத்தாம் முயல்வரெனில் மங்கையர் க்கு நலமாகும் மாண்பும் ஆகும். சரிநிகராய் வாழ்வதுதான் சரியெனவே உடன்படலில் தாழ்ச்சி யில்லை உரிமையெனும் பேர் சொல்லிப் பெண்மையையே உரிவதை நான் ஒப்ப வில்லை கரிமனத்தர் விழிவழியே கனல்புகுத ஒப்பனைகள் காட்டி யெங்குந் திரிவதுதான் உரிமையெனிற் சிறியதைச் சாய்ப்பதுதான் எனது வேலை. 108