பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகின் சிரிப்பு’’ என்ற இவர் தம் கவிதை 1950ஆம் ஆண்டு கோவையில் நடந்த முத்தமிழ்மாநாட்டில் முதற்பரிசுக் குரியதெனப் பாவேந்தர் பாரதிதாசனால் தேர்ந்தெடுக்கப் பெற்ற சிறப்பினையுடையது. 1966 Qsb “op to us ர ச ன் கவிதைகள்’ என்ற நூலும் 1973இல் 3ரகாவியம்’ என்ற நூலும் தமிழக அரசின் பரிசிலைப் பெற்றன. சிறப்புக்குரிய பல பாடல்கள் சாகித்திய அகாதெமியால் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1966இல் பறம்புமலையில் நடந்த பாரி விழாவில் தவத்திரு. குன்றக்குடி அடிகளார். இவர்க்குக் கவியரசு" என்னும்பட்டம் வழங்கிச் சிறப்புச் செய்தார். 1979ஆம் ஆண்டு பெங்களுர் உலகத் தமிழ்க்கழகத்தினர் இவரை அழைத்துப் பொன்னாடை அணிவித்துப் பொற்பேழையும் வழங்கினர். இது போலவே இவர்பாற்பயின்ற மாணவர் சிலர் இவர்தம் மணிவிழா நாளன்று (7-10-1979) பொன்னாடை போர்த்துப் பொற்கிழி வழங்கி மகிழ்ந்தனர் 1980 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக்கழக மாநில இலக்கியஅணி, கவிஞரின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழா வினை நடத்தியது அப்பொழுது கழகத்தின் சார்பில் டாக்டர் கலைஞர் அவர்கள் பத்தாயிரம் வெண்பொன் பொற்கிழி வழங்கிப் பாராட்டிச் சிறப்புச் செய்தார் 1983 ஆம் ஆண்டு தமிழகப்புலவர்குழு "தமிழ்ச்சான்றோர்’ என்னும் விருது வழங்கிச்சிறப்பித்தது எல்லா நம்பிக்கைகளிலும் மேலானதாக அவர் கொண்டி ருப்பது என்றும் நானோர் இளைஞன்” என்ற நம்பிக்கையே. இந்த நம்பிக்கை சுவையும், பயனும் முதிர்ந்த பல கவிதை களை மேலும் தரும் என்று நம்புவோமாக 13