பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்நிலையின் தாக்கமும், சுயமரியாதை இயக்க வேட்கையும், பாவேந்தர் பால் கொண்ட பற்றும் கடவுள் மேலிருந்த கருத்தை மாற்றிக் காலத்தின் தேவையைப் பாடவந்த கவிஞராக ஆக்கி விட்டன. கலப்பு மனத்தின் தேவையைப் பற்றிக்கவிதைபல பாடிய இவர் தாமும் கலப்பு மணம் செய்து கொண்டு தம் பிள்ளை கட்கும் கலப்பு மணம் செய்வித்துத் தம் கொள்கைக்கு வெற்றி தேடித் தந்துள்ளார். 'அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்' என்னும் வள்ளுவன் வாக்கைத் தோல்வியுறச் செய்த பெருமை இவர்க்குண்டு. சாதி சமயங்களுக்குள் ஆட்படாமை - நன்றி மறவாமை நட்பைப் பேணல்-கொள் கைப் பிடிப்பு-குறிக்கோள் வாழ்வு உதவும் உள் ளம் - ஒட்டார் பின் செல்லாமை ஆசிரியர்ப் போற்றல்-ஆகியன இவர்தம் இயல்பிற் சில. "சங்கப்புலவர் தம் பாடலே பாடல்’ என்பதில் அழுத்த மான நம்பிக்கை உடைய இவர் பாட்டுலகில் பாரதியாரைப் பாட்டனாகவும், பாரதிதாசனாரைத் தந்தையாகவும் கருதிக் 'குலமுறை கிளத்தும்’ கொள்கையுடையராக விளங்குகிறார் பெரும்பாலும் தன்னை மறந்த லயம் தன் னில்’’ இருக்கும் இயல்பினார் புட்டி”களின் துணையால் அன்று;எட்டியவரை, சிந்திக்கும் இயல்பினால் கனவிலும் கவிதை பாடுவது என்பது இவருக்கே உள்ள தனித்திறனாகும். கனவிற்பாடிய கவிதையை மறுநாள் காலையில் எழுந்து வரிமாறாமல் எழுதி விடும் இவரது ஆற்றல் வியப்புக்குரியது இஃது இயற்கை வழங்கிய அருட்கொடை என்றே கூறல் வேண்டும். 12