பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாக்கை நிலை நிறுத்துவது போல் மகள் மார் மூவரையும் '*ன்மார் மூவரையும் பிள்ளைச் செல்வங்களாகப் பெற் றுள் ளார். 1955 ஆம் ஆண்டில் குருதி உமிழும் கொடு நோய்க்கு இலக்கானார். "பிழைப்பது அரிது’ என்ற நிலை வந்துற்ற போத புதுக்கோட்டை அண்ணல் சுப்பிரமணியனார் தாயினும் சாலப் பரிந்தெடுத்து. நோய் நீங்கி நலம் எய்த மருத்துவர் வி. கே.இராமச்சந்திரனார் துணையோடு எல்லா வகையானும் உதவி புரிந்தார். அவ்வுதவி இயம்பத் தீரா ஏற்றமுடையது, புத் துயிர் கொடுத்த அவ்வித்தகரைத் தந்தையாகவே கருதி வருகிறார் கவிஞர் காலத்தினால் செய்த ஞாலத்தின் பெரிதாகிய அவ்வுதவியை நாடொறும் எண்ணி உருகுகின்றார் இடையில் ஓராண்டு திரைப்படத்தின் ஈர்ப்புக்கவர்ச்சிக்கு ஆளாகிச் சென்னை சென்றார் ஆங்கு நிகழும் நிகழ்ச்சிகள் தம் இயல்புக்கு ஏலாதன: என்பதைக் கண்டு மறு ஆண்டே தமிழாசிரியப் பணிக்கு மீண்டார் 1966இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தாகக் கல்வித் துறையினரால் இவர்மீது வழக்கொன்று கொண்டு வரப்பட்டது 'விசாரணை' நடைபெற்றது. அப் போது இந்தியை எதிர்ப்பவன் தான் நான். அதற்கு என் பாடல்களே சான்று ஆனால் இப்போது சாற்றப்பட்டிருக்கும் குற்றங்கள் பொய்யானவை. என் மீது பழிசுமத்துவதற்காக இட்டுக் கட்டப்பட்டவை' என்று வாக்குமூலம் கொடுத்தார் ஆய்வுக்குப் பின்னர் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இளமைக் காலத்தில் முருகனைப்பாடுவதே முத்தமிழ் கற்றதன் பயன் என்றிருந்த இவர் 1940 க்குப் பிறகு சமுதாயச் குழல்-நாடு-மொழி இவற்றையே பாடி வருகின்றார். 11