பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1947-1949 வரையிலான இரண்டாண்டுக் காலம் சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். இக்காலம் அவர்தம் எழுத்து வன்மை உரம் பெற வாய்ப்பாக அமைந்தது மட்டுமின்றி அறிஞர் பலரோடு தொடர்பு கொள்ளவும் ஏற்ற தாக இருந்தது. போர் வாள் , கதிர வன், குயில், முருகு, அழகு முதலிய இதழ்கள் இவர் தம் சிறுகதைகளையும், கவிதை களையும், கட்டுரைகளையும் தாங்கி வந்தன. அப்பொழுது புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த 'பொன் னி' எனும் இலக்கிய இதழ் பாரதிதாசன் பரம்பரை யில் முன்னணி யில் நிற்பவராக இவரை அறிமுகம் செய்து வைத்தது. சென்னையில் பேராசிரியர் மயிலை சிவ முக்து, தமிழ்த் தென்றல் திரு. வி. க. கவிஞர் வாணிதாசன் ஆகிய புலமைச் சான்றோர்களுடன் இவர் இடையறாத் தொடர்பு கொண்டி ருந்தார். 1949ஆம் ஆண்டு பேராசிரியர் மயிலை சிவமுத்து அவர் களின் சீரிய தலைமையில் கலைச்செல்வி என்னும் நலத்த கையாரைக் கலப்புத் திருமணம் செய்து கொண்டார். அப்பொழுது நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட் டத்தில் தனியாக எதிர்ப்பதைக் காட்டிலும் துணையோடு சென்று எதிர்ப்பதுதான் வெற்றிக்குரிய போராட்ட முறை என்பதனால் தக்க துணையோடு (துணைவியாரோடு) ஈடு பட்டார். திருமணம் முடிந்த பின்னர்ச் சென்னையிலிருந்து விலகி வந்து காரைக்குடியில் மீ ச. . உயர் நிலைப்பள்ளியில் தமிழா சிரியராக அமர்ந்து 28 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள் ளார். "ஆணும் பெண்ணும் சரிநிகர்’ என்ற பார தியின் 10