பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறங்கிவரும் சிற்றாறும் - வெள்ளிக் காசைச் சிண்டிவிட்டாற் போலத் துள்ளிக் குதிக்கும். கெண்டை மீன்களும் வெடித்துச் சிரித்துக் காண்பவர் விழியைக் கவரும் வாசமலர்; குலமும் துரைராசுவின் இதயத்தைக் கவர்ந்தன என்னவோ செய்தன. தாய்மாமன் துரைசாமி ஊட்டிய இலக்கியச்சாறு தன் வேலையைத் தொடங்கிவிட்டது. விளைவு ...? இளைஞர் துரைராசு கவிஞர் முடியரசன் ஆனார். மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரி தமிழறிவைத் தந்து சிறப்பித்தது அக்கல்லூரியில் நிகழும் அறிஞர் பெருமக்களின் உரைகள், அப்போது நிகழ்ந்த உரையாடல்கள் கவிஞரின் உள்ளத்தில் ஆழ்ந்த மொழிப் பற்றையும் இனப்பற்றையும் கிளர்ந்தெழச் செய்தன. 1940ஆம் ஆண்டில் தந்தை பெரியாரின் தன்மான இயக்கத்தில் தொடர்புகொண்டார். இக்தொடர்புஅவருடைய ஆளுமையை வெற்றிபெறச் செய்த போதிலும் 1943-ஆம் ஆண்டு வித்துவான் தேர்வில் தோல்வியுறச் செய்தது. அவர் தோல்வியுறவில்லை; தோல்வியுறுமாறு செய்யப்பட்டார். இடையிலே நவாபு டி. எசு. இராச மாணிக்கம் நாடகக் குழு தம்பால் பணியாற்ற வருமாறு அழைத்தது சென்றார். அங்கிருந்த சிறைவாழ்க்கையும் மதவழிபாட்டு முறைகளும் வெறுப்பை விளைத்தன. எனவே போன சு வடு அழியு முன்னரே திரும்பி வந்துவிட்டார். பின்னர்த் அம்மைத்தோல்வி யுறச் செய்தவர்களைத் தோற்கடிப்பதற்காகத் "தலைமறை வாக” இருந்து படித்து 1947 இல் வித்துவான் பட்டம் பெற்றார். o 9