பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o கவிஞரைப் பற்றி (பாவலர்மணி ஆ. பழநி) பெரியகுளம்........... மதுரை மாவட்டத்தின் எழில் கொஞ்சும் நகரம் மட்டுமன்று. இருபதாம் நூற்றாண்டின் இலக்கியப் பசியைத் தணிக்கத் தமிழ் விருந்து படைத்த கவியரசு முடியரசனாரை ஈன்றெடுத்த நகரமும் ஆகும். 7-10-1920 தமிழ் நெஞ்சங்களில் நிலை பெற்றுவிட்ட நாள் ஏனெனில், அதுதான் கவியரசு முடியரசனார். சுப்ப ராயலு சீதா லெட்சுமி என்பார்க்கு மகனாகப் பிறந்த நல்ல நாள். பிறப்பினாலேயே பெருமை வந்து விடுமா?’ என்று சிலர் வினவுவர். வாழ்வின் சிறப்பினால் பெருமை வளர்கின்ற பொழுது அது பிறப்பையும் பெருமைப்படுத்தி விடுவது உண்மைதானே! உரிய வயதில் தொடக்கக் கல்வி கற்பிக்கப்பட்டது தாய்மாமன் துரைசாமி பிற்கால இலக்கியங்களில் பெரும் ஈடுபாடு கொண்டவர். இதனால் 'இலக்கியச் சாறு பருகும் பழக்கம் இளமையிலேயே இவருக்குக்கிட்டிற்று. அது இந்தக் கவிதைமீனுக்குப் பெரியகுளத்தை நல்ல நீச்சற்குளமாக ஆக்கிற்று. வளைந்து கிடக்கும் மேற்குமலைத் தொடரும் அதில் மேய்ந்துதிரியும் மேகக் காட்சியும் - இசைபாடும் புள்ளினமும்